Watch: வைரலாகும் ஜிவா தோனி, ரிஷப் பாண்டுவும் செய்த குறும்புத்தனம்!

தோனி மகள் ஜிவா தோனி, இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பாண்டுடன் செய்த குறும்புத்தனமான வீடியோ வைரலாகி வருகிறது!

Last Updated : Jun 17, 2019, 02:48 PM IST
Watch: வைரலாகும் ஜிவா தோனி, ரிஷப் பாண்டுவும் செய்த குறும்புத்தனம்! title=

தோனி மகள் ஜிவா தோனி, இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பாண்டுடன் செய்த குறும்புத்தனமான வீடியோ வைரலாகி வருகிறது!

நேற்று மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து, 337 ரன்கள் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடியது. கடின இலக்கை அடைய முடியாமல் போராடிய பாகிஸ்தானின் ஆட்டம் மழையால் தடைபட, விதிப்படி இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தய அணிக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தல தோனி காலத்திலும், களத்துக்கு வெளியேவும் தனது மகளுடன் செய்யும் க்யூட் விஷயங்கள் வைரலாவது வழக்கம். இவருக்கு இந்தியாவில் மட்டும் அல்ல; உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பது பலராலும் மறுக்கமுடியாத உண்மை. இந்நிலையில், நேற்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற மான்செஸ்டர் மைதானத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் மகள் ஜிவா தோனி, இந்திய வீரரான ரிஷப் பாண்டுடன் செய்த க்யூட்டான அட்டகாசங்கள் நிறைந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், தோனியின் மகள் ஜிவா தோனியுடன் சேர்ந்து  இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பாண்டு குறும்புத்தனமாக கூச்சலிடுகின்றனர். இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Partners in crime @ziva_singh_dhoni

A post shared by Rishabh Pant (@rishabpant) on

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Separated ( seating ) but united we stand !

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

 

Trending News