உங்கள் மலத்தை தானம் செய்தால் மாதம் ரூ.1.4 கோடி சம்பாதிக்கலாம்!

மைக்கேல் ஹாரோப் என்பவரால் தொடங்கப்பட்ட ஹ்யூமன் மைக்ரோப்ஸ் என்ற நிறுவனம் உங்கள் மலத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 1 கோடியே 40 லட்சம் வழங்குகிறது.  

Written by - RK Spark | Last Updated : May 23, 2024, 07:06 AM IST
  • மலம் கழிப்பதற்கு ரூ.1.4 கோடி வழங்கும் நிறுவனம்.
  • ஒருவரின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று கூறுகிறது.
  • அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
உங்கள் மலத்தை தானம் செய்தால் மாதம் ரூ.1.4 கோடி சம்பாதிக்கலாம்! title=

கடந்த 2020 ஆம் ஆண்டில் மைக்கேல் ஹாரோப் என்பவரால் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம் உலகம் முழுவதும் இருந்து மல தானம் செய்பவர்களை ஏற்றுக்கொள்கிறது. "நீங்கள் இளமையாகவும், விளையாட்டு வீரராகவும், நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் இருந்தால் எங்களது இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்" என்று ஹ்யூமன் மைக்ரோப்ஸ் (Human Microbes) என்ற நிறுவனம் யூடியூபில் விளம்பரம் செய்துள்ளது. அதில் ஒருவரின் மல மாதிரிக்கு 500 USD டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 41,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தினசரி நல்ல குடல் இயக்கம் இருந்தால் வருடத்திற்கு சுமார் 180,000 USD டாலர் இந்திய மதிப்பில் ரூ. 1 கோடியே 40 லட்சம் வழங்கப்படும் என்று நிறுவனம் கூறுகிறது.

மேலும் படிக்க | Viral Video: பாசக்கார பய போலிருக்கு.... புறாவுக்காக வாயை கொடுத்த ‘பாரி’ வள்ளல்...!!

தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் இந்த வீடியோவில், நீங்கள் மல தானம் செய்பவராக எப்படி மாறுவது என்பதை விளக்கம் வகையில் குறிப்பும் உள்ளது. மல தானம் செய்பவர்கள் எப்படி மலம் கழிக்க வேண்டும்? அது எப்படி ஒருவரின் உயிரைக் காப்பாற்றும் என்பதையும் தெளிவாக கூறியுள்ளனர். இதை கேட்பதற்கு வினோதமாக இருந்தாலும் ஹ்யூமன் மைக்ரோப்ஸ் குழு (Human Microbes) ஆரோக்கியமான ஒரு நபரின் மலத்தை பதப்படுத்தி அதனை குடல் நோய்களால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு செலுத்தினால் இந்த நோயை குணப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி மனநல பிரச்சினைகளைக் கூட சரி செய்ய முடியும் என்று அந்த நிறுவனம் கூறுகிறது.

ஹ்யூமன் மைக்ரோப்ஸ் நிறுவனம் பற்றி

ஹ்யூமன் மைக்ரோப்ஸ் நிறுவனம் கடந்த 2020ல் மைக்கேல் ஹாரோப் என்பவரால் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து மல தானம் செய்பவர்களை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த இரண்டு நாடுகளில் இருந்து மட்டும் இல்லாமால், உங்களால் உலர் பனியில் உங்கள் மலத்தை நிறுவனத்திற்கு அனுப்ப முடிந்தால் உலகம் முழுவதிலுமிருந்து மலத்தை ஏற்றுக்கொள்கின்றனர். "தரமான மல தானம் செய்பவரை கண்டுபிடிப்பதில் எங்கள் நிறுவனத்தின் கவனம் உள்ளது. இது பெரும்பாலான மக்களின் சிகிச்சைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்," என்று ஹ்யூமன் மைக்ரோப்ஸ் அவர்களது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

யார் இந்த மைக்கேல் ஹாரோப்?

ஹ்யூமன் மைக்ரோப்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மைக்கேல் ஹாரோப் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை சேர்ந்தவர். இவர் கடந்த 2014 முதல் நுண்ணுயிர் ஆராய்ச்சியையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆராய்ச்சியின் முடிவு மலத்தை வாங்கும் நிறுவனத்தை தொடங்க உதவி இருக்க கூடும். ஆரோக்கியமான நன்கொடையாளரிடமிருந்து இருந்து பெறப்படும் மலம், குடல் நோயாளியின் இரைப்பைக் குழாயில் மலத்தை மாற்றுவதை உள்ளடக்கியது. கடுமையான பெருங்குடல் நோய்த்தொற்றை இந்த சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இருப்பினும், மனநலம் மற்றும் பிற நோய்களை இதன் மூலம் சரி செய்ய முடியும் என்று மருத்துவ ஆதாரங்கள் எதுவும் இதுவரை இல்லை. 

நீங்களும் மல தானம் செய்ய முடியுமா?

நீங்களும் உங்கள் மலத்தை விற்று ஆண்டுக்கு ஒரு கோடி சம்பாதிக்க வேண்டுமா? ஆனால் நிறுவனத்தின் கூற்றுப்படி, அனைவரும் நன்கொடையாளர் ஆக முடியாது. ஒரு மல நன்கொடையாளராக நீங்கள் மாற நல்ல சிறந்த உடல் மற்றும் மன நிலையில் இருக்க வேண்டும். நீங்கள் மல தானம் செய்ய விருப்பினால் நிறுவனம் உங்களிடம் சில கேள்விகளை கேட்கும். பிறகு உங்களின் மல வகை மற்றும் உடல் தகுதி பற்றிய முழுமையான சரிபார்ப்பு நடைபெறும். பிறகு உங்கள் மலம் மற்றும் இரத்த பரிசோதனை நடைபெறும். இந்த அனைத்திலும் நீங்கள் தகுதி பெற்றால் நீங்கள் மல தானம் செய்பவராக தேர்ந்தெடுக்கப்படலாம்.

உங்களுக்கு தெரியுமா?

ஹ்யூமன் மைக்ரோப்ஸ் நிறுவனம் தான் முதன் முதலில் மலத்திற்கு பணம் தரும் நிறுவனம் இல்லை. உங்கள் மலத்திற்க்கு பணம் பெறுங்கள் என்று அமெரிக்காவை சேர்ந்த பல நிறுவனங்கள் உள்ளன. இதே போல செயல்படும் இன்னொரு நிறுவனம், மலத்திற்கு ஒரு மாதத்திற்கு சுமார் ரூ. 1.2 லட்சம் வரை கொடுக்கின்றனர்.

மேலும் படிக்க | கல்லறையில் இருந்து வந்த குரல்.... பூமியில் புதைக்கப்பட்டவரை உயிருடன் மீட்ட அதிசயம்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News