இளைஞர்கள் அனைவரும் தற்போது மற்றவர்களை விட தங்களை வேருபடுத்திக் காட்டவே விரும்புகின்றனர். இதில் சிலர் தங்களுக்கென பல அடையாளங்களை அமைத்துக்கொள்ள அபாயகரமான உத்திகளை மேற்கொள்கின்றனர்.
அமெரிக்காவை சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் தன்னை வேற்றுக்கிரகவாசியை போல் பல அபாய நடைமுறைகளை பின்பற்றி வருகின்றார். வேற்றுக்கிரகவாசிகள் இருக்கார்களா இல்லையா என்ற கேள்விக்கு இன்னும் சந்தேகத்துடனே பதில் சொல்லும் ஆய்வாளர்கள் மத்தியில் தெளிவான பதிலானது இன்னும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அமெரிக்கா கலிபோர்னியாவை சேர்ந்த வின்னி ஒ (வயது-22) என்பவர் தன்னை வேற்றுக்கிரகவாசியை போல் மாற்றிக்கொள்ள இதுவரை 110 பிளஸ்டிக் அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் இவ்வாறு மாறுவதற்காக அவரது பிறப்புறுப்பையும் நீக்கியுள்ளார் என்பது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இவர், இந்த முயற்சியை தன்னுடைய 17 வயதில் இருந்தே துவங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இவர் முதலில் மாடலாக இருந்துள்ளார். அதன் பின்னர் தன்னை வேற்றுக்கிரகவாசிபோல் மாற்றிக்கொள்ள அதிக செலவும் செய்து வந்துள்ளார்.
இவர் தனது பிறப்புறுப்பு மற்றும் தொப்புள் போன்றவற்றை நீக்குவதற்காக சுமார் 13,000 டாலர் செலவு செய்துள்ளார். இவரது முழுகவனத்தையும் தன்னை வேற்றுக்கிரகவாசியாக மாருவதிலேயே செலுத்திவருகிறார். அதுமட்டுமின்றி வாழ்வது சாத்தியம் எனவும், அதற்க்கு அதிஷ்டம் செய்திருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.