INDvsAUS: தனது ரசிகருடன் மைதானத்திற்குள் ஓடி விளையாண்ட தோனி....

 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின்போது காலில் விழவந்த ரசிகருடன் தோனி ஓடிப்பிடித்து விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது!!

Updated: Mar 6, 2019, 09:03 AM IST
INDvsAUS: தனது ரசிகருடன் மைதானத்திற்குள் ஓடி விளையாண்ட தோனி....

 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின்போது காலில் விழவந்த ரசிகருடன் தோனி ஓடிப்பிடித்து விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது!!

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று வருகிறது. 

அதன்படி தற்போது நடைப்பெற்று வரும் ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நாக்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்து விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 48.2 ஓவர்களில் 250 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 116 ரன்களும், விஜய் சங்கர் 46 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை அடுத்து, அரைமணி நேர இடைவெளிக்குப்பிறகு, 2-வது இன்னிங்சில் பீல்டிங் செய்வதற்காக இந்திய அணி வீரர்கள் மைதானத்துக்குள் வந்தனர். அப்போது, ரசிகர் ஒருவர் பலத்த பாதுகாப்பைத் தாண்டி ஆடுகளத்துக்குள் நுழைந்தார். தோனியைப் பார்த்து ஓடி வந்தார். இதனைப் பார்த்த தோனி, ரசிகரிடம் சிக்காமல் சிறிது நேரம் ஓடிப்பிடித்து விளையாடினார்.

பின்னர், ரசிகரின் அன்புக் கட்டளையை ஏற்றுக்கொண்டு ஓடுவதை நிறுத்தினார் தோனி. உடனே தோனியின் காலில் விழுந்த ரசிகர், அவரை கட்டியணைத்துவிட்டு ஓடிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யாராவது அருகில் வந்தால் தொடுவதற்கே பயப்படும் கிரிக்கெட் வீரர்களுக்கு மத்தியில் ரசிகருடன் தோனி நடந்த கொண்ட செயல் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தோனியின் காலில் ரசிகர்கள் விழுவது புதிதானதில்லை. இந்த நிகழ்வையும் சேர்த்து மொத்தம் 15 முறை ரசிகர்கள் தோனியின் காலில் விழுந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் விரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது..