இரையே காவு வாங்கியது... தவளையை தூக்கும் பூச்சி - வைரல் வீடியோ

தவளை ஒன்றை பூச்சி தூக்குவதுபோல் வெளியாகி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 13, 2022, 12:57 PM IST
  • தவளையை பூச்சி தூக்கும் வீடியோ வைரலாகியுள்ளது
  • இந்த வீடியோ கிராஃபிக்ஸ் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்
 இரையே காவு வாங்கியது... தவளையை தூக்கும் பூச்சி - வைரல் வீடியோ title=

உலகில் இருக்கும் அனைத்து உயிரினங்களும் மற்றவைகளுக்கு ஆச்சரியம் கொடுக்கக்கூடியவை. ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு வகையான உடலமைப்பு, வாழ்வியல் அமைப்பு, உணவு சங்கிலி என இயற்கை எப்போதும் பிரமிப்பான ஒன்று.

அதேசமயம் ஒன்றை கொன்று இரையாக்கிக்கொண்டால்தான் மற்றொரு உயிரால் வாழ முடியும் என்ற நடைமுறையையும் ஒவ்வொரு உயிருக்கும் இயற்கை வைத்திருக்கிறது. 

பூச்சியை தவளை தின்றால் தவளையை பாம்பு உண்ணும் இப்படியான சங்கிலி ஆச்சரியப்படுத்துவது. அதைத்தான் உணவு சங்கிலி என்கிறார்கள்.  எப்போதும் தவறாத இந்த சங்கிலி சில சமயம் அரிதிலும் அரிதாக சிறிது தடுமாறும்.

மேலும் படிக்க | Viral News: இந்த நாட்டில் தங்கத்தை விட ஆணுறையின் விலை அதிகம்; விலை ரூ.60,000 மட்டுமே

வேட்டையாடப்போகும் புலியை மான் கூட்டம் துரத்துவது, சிங்கத்தை செந்நாய்கள் தாக்குவது என்று அப்படியான வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகப் பரவும்.

மேலும் படிக்க | ஆட்டுக்குட்டியை அம்மாவிடம் சேர்த்துவைத்த கியூட் சிறுவன்: 'சோ ச்வீட்' என உருகும் நெட்டிசன்கள்

அப்படி ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பூச்சியை உண்ண முயலும் தவளைக்கு அந்த பூச்சி பயம் காட்டிவிட்டது போல் இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

 

அந்த வீடியோவில், பறந்து வரும் பூச்சி ஒன்றை தவளை தனது நாக்கால் இழுத்து இரையாக்க முயல்கிறது. ஆனால் அந்த பூச்சி தவளையின் நாக்கை கெட்டியாக பிடித்துக்கொண்டு தவளையை அப்படியே தூக்குவதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க | பூனையை புரட்டு எடுக்கும் சேவல்; இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ

இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அதனை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். அதேசமயம், இந்த வீடியோ கிராஃபிக்ஸ் செய்யப்பட்டது என்றும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர். எது எப்படியோ பார்ப்பதற்கு இந்த வீடியோ பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | Attack by Ape: கிட்ட வந்தா கடிச்சிடுவேன்: மனிதனை எச்சரிக்கும் மனிதக் குரங்கு: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News