நடிகை கீர்த்தி சுரேசுக்கு கமல் பாராட்டு! Photo Inside!!

தென்னிந்திய சினிமாவை கலக்கிய மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில்  ‘மகாநதி’ என்ற பெயரிலும் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

Updated: May 12, 2018, 08:38 AM IST
நடிகை கீர்த்தி சுரேசுக்கு கமல் பாராட்டு! Photo Inside!!
Courtesy: Twitter

தென்னிந்திய சினிமாவை கலக்கிய மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில்  ‘மகாநதி’ என்ற பெயரிலும் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அதேபோல, படத்தின் நாயகனா "ஜெமினி கணேசன்" வேடத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சமந்தா, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை அஸ்வின் நாக் இயக்கியுள்ளார்.

இந்த படம் நேற்று வெளியானது. படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்து பல முன்னணி நட்சத்திரங்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வந்த நிலையில், தற்போது படத்தை பார்த்த நடிகர் கமலஹாசனும் கீர்த்தி சுரேஷின் நடிப்பை நேரில் வரவழைத்து பாராட்டி உள்ளார்.

நடிகர் கமல்ஹாசனுடன் எடுத்த புகைப்படத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது டிவிட்டார் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். மேலும் அதில், கமலின் ஆசிர்வாதம் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.