)
Devotees Drinking AC Water Thinking Its Holy Water : சமூக வலைதளங்களின் வளர்ச்சி, நம்மை சில நேரங்களில் ஆச்சரியப்பட வைக்கவும், சில நேரங்களில் அதிர்ச்சிக்குள்ளாக்கவும் செய்கின்றன. அப்படி, சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ குறித்தும், அந்த வீடியோ குறித்து அனைவரும் என்ன பேசி வருகின்றனர் என்பது குறித்தும் இங்கு பார்ப்போம்.
வைரல் வீடியோ:
உத்தர பிரதேசத்தில் இருக்கும் ஒரு கிருஷ்ணர் கோவிலில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கோவிலின் பெயர், பாங்கே பிகாரி. பிருந்தாவனில் இருக்கும் இந்த கோவிலை பார்க்க பல பக்தர்கள் தினந்தோறும் வருவது வழக்கம். அந்த வகையில், அக்கோவிலுக்கு வந்த சில பக்தர்கள்தான் ஏசி தண்ணீரை தீர்த்த நீர் என நினைத்து குடித்திருக்கின்றனர்.
Too much innocence
— Anuj Prajapati (@anujprajapati11) November 3, 2024
I won’t blame them, Even my Parents would do the same #viralvideo
pic.twitter.com/hXvq82AxU9
தற்போது காண்பிக்கப்படும் அந்த வீடியோவில், மக்கள் கைகளில் இருக்கும் பிளாஸ்டிக் கப்பை வைத்து, கோவிலில் இருந்து வரும் தண்ணீரை குடிக்கின்றனர். அதை வ்லாக் எடுத்துக்கொண்டிருந்த ஒரு யூடியூபர், அது சாமியின் பாதத்தில் இருந்து வரும் நீர் அல்ல, ஏசியில் இருந்து வரும் நீர் என்கிறார். அதன் பிறகு அந்த வழியாக செல்லும் பலர், அந்த நீரை தலையில் தெளித்துக்கொண்டு செல்கின்றனர்.
இப்படி அப்பாவித்தனமாக ஏசி தண்ணீரை தீர்த்த நீர் என்று நினைத்து, அதை குடித்த/தெளித்த நபர்களை பார்த்து நெட்டிசன்கள் சிரிப்பதா, அழுவதா எனத்தெரியாமல் திகைத்து போயுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ