காரின் கூரையில் கொண்டாடப்பட்ட தீபாவளி!! இங்க வெச்சா ராக்கெட் விட்றது? வைரல் வீடியோ..

Viral Video Of Crackers Through Car Roof : தீபாவளி பண்டிகையை சற்று வித்தியாசமாக கொண்டாடியவர்களின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Nov 2, 2024, 07:05 PM IST
  • வித்தியாசமான தீபாவளி கொண்டாட்டம்
  • கார் கூரை மீது வெடிக்கப்பட்ட ராக்கெட்
  • வைரலாகும் வீடியோ..
காரின் கூரையில் கொண்டாடப்பட்ட தீபாவளி!! இங்க வெச்சா ராக்கெட் விட்றது? வைரல் வீடியோ..

Viral Video Of Crackers Through Car Roof : பண்டிகை தினம் என்றாலே, மகிழ்ச்சி மற்றும் புதிய தொடக்கத்திற்கான நாள் என்பது அனைவருக்கும் தெரியும். அதிலும், தீபாவளி பண்டிகை என்பது இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் விமரிசையாக கொண்டப்படும் பண்டிகைகளுள் ஒன்றாகும். இந்த பண்டிகை நாளில், பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி, வாண வேடிக்கைகள் நிகழ்த்தி, உறவினர்களை சந்தித்து, தனக்கேற்ற பாணியில் ஒவ்வொருவரும் கொண்டாடுவர். இந்த நாளில், தீபாவளியை வித்தியாசமாக கொண்டாடுகிறேன் என்ற பெயரில் ஒரு சில பேர் கோமாளித்தனம் செய்வர். அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. 

Add Zee News as a Preferred Source

வைரல் வீடியோ..

2024ஆம் ஆண்டின் தீபாவளி பண்டிகை, சமீபத்தில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதியன்றும் நவம்பர் 1ஆம் தேதியன்றும் கொண்டாடப்பட்டது. தீபாவளியன்று மட்டும்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது இல்லை. பலர், தீபாவளிக்கு ஓரிரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே பட்டாசு வெடிக்க ஆரம்பித்து விடுவர்.  அப்படி, அக்டோபர் 28ஆம் தேதியன்று வைரலான ஒரு வீடியோதான் இது. 

தற்போடு வைரலாகி வரும் அந்த வீடியோ, ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் பகுதியில் எடுக்கப்பட்டிருக்கிறது. அங்கிருக்கும் நெடுஞ்சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருக்கிறது. அதற்கு பின்பக்கம் இருக்கும் பகுதியில் ஒரு டப்பாவில் பட்டாசுகள் கொளுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. கார் ரோட்டில் முன்னேறி சென்று கொண்டிருக்க, அந்த டப்பாவில் இருந்து பட்டாசுகள் வெடித்த வண்ணம் இருக்கிறது. இதை, பின்னால் வரும் வண்டியில் இருந்து வீடியோ எடுத்திருக்கின்றனர். இதை பார்த்த நெட்டிசன்கள் பலர், ஒரு இடத்தில் வைத்து வெடிக்கப்படும் பட்டாசுகளே சில இடங்களில் ஆபத்தில் கொண்டு சென்று விட்டுவிடும் நிலையில், இப்படிப்பட்ட வீர சாகசங்கள் தேவைதானா என கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர், இந்த கார் நம்பரை கண்டறிந்து அந்த நபரை கைது செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | ஆசீர்வாதம் வாங்கிவிட்டு அந்த நபரையே சுட்டுத்தள்ளிய நபர்!! திக் திக் சிசிடிவி காட்சிகள்..

மேலும் படிக்க | வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்கள் மீது ஏறிய கார்! அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News