குதிரைக்கும் காமெடியான ஹேர்கட்! இது நிலைமையை பாத்தீங்களா..வைரல் வீடியோ

Horse Funny Hairstyle : ஒரு குதிரைக்கு, பெண் ஒருவர் காமெடியாக செய்திருக்கும் ஹேர்கட் வீடியோ, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Sep 13, 2024, 08:46 PM IST
  • குதிரைக்கு பேங்க்ஸ் ஹேர்கட்!
  • அழுதுரும் போலையே..
  • வைரல் வீடியோ..
குதிரைக்கும் காமெடியான ஹேர்கட்! இது நிலைமையை பாத்தீங்களா..வைரல் வீடியோ title=

Horse Funny Hairstyle : விலங்குகள் செய்யும் குறும்புகள் எப்போதும் நம்மை சிரிப்பூட்டுபவையாக இருக்கும். மிருகங்களை வளர்க்கும் அதன் உரிமையாளர்கள், அவற்றை வைத்து செய்யும் நகைச்சுவையும் பயங்கரமாக இருக்கும். அப்படி, குதிரையை வைத்து, பெண் ஒருவர் செய்திருக்கும் சம்பவம், இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வைரல் வீடியோ..

இணையத்தில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில், ஒரு குதிரை பாவமாக நின்று கொண்டிருக்கிறது. அதன் தலையில் விக் கவிழ்க்கப்பட்டிருக்கிறதா, அல்லது அது அந்த குதிரையின் ஒரிஜினல் முடியா என்பது தெரியவில்லை. அந்த குதிரையின் தலையில் முன்னாடி விழுந்திருக்கும் முடியை அப்படியே பிடித்து கத்திருக்கோலால், அப்பெண் கட் செய்கிறார். அந்த குதிரையும் தலையை கொடுத்து விட்டு பாவமாக நிற்கிறது. பின்னர் பெண்கள் பலர் வெட்டிக்கொள்ளும் பேங்க்ஸ் ஹேர் ஸ்டைல் போல அப்பெண் அந்த குதிரையின் முடியை வெட்டி விடுகிறார். 

இந்த வீடியோவை பார்ப்பவர்கள், “அந்த குதிரை கொஞ்சம் விட்டா அழுதுரும் போல இருக்கு..” என்று கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | அரசு பள்ளிக்குள் பீர் குடிக்கும் மாணவிகள்! வைரலாகும் வீடியோ!

குதிரைகளுக்கு மனிதர்களை பிடித்திருப்பது ஏன்? 

மனிதர்களுக்கு பிடித்த, மனிதர்களை பிடித்த விளங்குகளுள் ஒன்று, குதிரைகள். இவற்றிற்கு, மனிதர்களை பிடிக்க பல்வேறு காரணங்கள் உண்டு. குதிரைகள், அனைவருடனும் எளிமையாக பழகும் குணம் கொண்டவை. இவை, ஒரு நல்ல மனிதரை பார்க்கும் போது அப்படியே அடையாளம் கண்டு கொள்ளுமாம். தங்களை ஒரு மனிதர் நன்றாக நடத்துகிறார் என்றால், அவருடன் இவற்றிற்கு உணர்வு ரீதியான பந்தம் இருக்குமாம். 

குதிரை ஓட்டுபவர்கள், இவற்றை எப்படி நடத்த வேண்டும் என்று நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள். தனக்கு ஒருவரிடம் பாதுகாப்பான உணர்வு ஏற்பட்டால் மட்டுமே, குதிரை அவரை மேலே ஏற அனுமதிக்குமாம். தனது பராமரிப்பாளர்களிடம் பாசமாக நடந்து கொள்ளும் விலங்குகளுள் ஒன்று, குதிரை என்பது ஆச்சரியத்திற்குரிய விஷயமாகும். 

மேலும் படிக்க | சூரிய கடவுளை பாதிப்பதாக கூறி சோலார் பேனல்கள் அடித்து உடைப்பு - வைரல் வீடியோ உண்மையா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News