இது சீறும் சிறுத்தையின் தாக்குதலா இல்லை நண்பனின் சீரியஸ் விளையாட்டா

திடீரென தாக்கினால் யாராக இருந்தாலும் நிலைகுலைந்துவிடுவார்கள். சாமார்த்தியமாக இருந்தாலும் சரி, நிலைகுலைந்தாலும் சரி, அது வீடியோவாக பதிவு செய்யப்பட்டால் தற்போது கட்டாயம் இணையதளங்களில் வெளியாகிவிடுகிறது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 14, 2022, 03:50 PM IST
  • திடீர் தாக்குதலை சமாளிக்கும் சாமர்த்தியசாலி
  • சிறுத்தையின் திடீர் தாக்குதல்
  • பதற்றமே இல்லாமல் சமாளிக்கும் சமயோஜிதம்
இது சீறும் சிறுத்தையின் தாக்குதலா இல்லை நண்பனின் சீரியஸ் விளையாட்டா title=

திடீரென தாக்கினால் யாராக இருந்தாலும் நிலைகுலைந்துவிடுவார்கள். சாமார்த்தியமாக இருந்தாலும் சரி, நிலைகுலைந்தாலும் சரி, அது வீடியோவாக பதிவு செய்யப்பட்டால் தற்போது கட்டாயம் இணையதளங்களில் வெளியாகிவிடுகிறது.

இணையதளங்களில் பல்வேறு சமூக ஊடகங்களில் வெளியாகும் வீடியோக்களில் சில பலராலும் விரும்பி ரசிக்கப்பட்டால், அவை வைரலாகின்றன.

மேலும் படிக்க | 'ப்பா...' என வாய் பிளக்க வைக்கும் டான்ஸ்: இணையத்தை கலக்கும் பெண்ணின் வைரல் வீடியோ

அப்படிப்பட்ட சில வீடியோக்கள், பல படிப்பினைகளையும், பயத்தையும், ஆச்சரியத்தையும் திகைப்பையும் தருவதாக உள்ளன. அதுமட்டுமல்ல, பாசக்கார வீடியோக்கள், அதிலும் விலங்கு-மனிதர்களுக்கு இடையிலான பாச வீடியோக்கள் கூகுளில் டிரெண்டிங் ஆகின்றன.

அப்படி வைரலாகும் வீடியோக்களில் ஒன்று சிறுத்தை, திடீரென ஒருவரை தாக்கும் வீடியோ. இந்த வீடியோ சில நொடிகள் மட்டுமே செல்லும் வீடியோவாக இருந்தாலும், பலத்த அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்துகிறது.

அதிர்ச்சிக்கு காரணம் திடீர் தாக்குதல் என்றால், வியப்புக்குக் காரணம் அதை சமாளிக்கும் மனிதரின் துணிவு. துணிந்தவனுக்கு உயிரும் துச்சம் என்று சொல்வதை உண்மையாக்கும் வீடியோ இது.

துணிந்து எதிர்தாக்குதல் நடத்துபவரிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக சிறுத்தை ஓடுவது ஆச்சரியமாக இருக்கிறது. பலம் தெரியாமல் மோதி விட்டோமா என சிறுத்தையையே சிந்திக்க வைத்துவிட்ட வீரர் யார்?

நீச்சல்குளத்தில் தான் உண்டு, தனது வேலை உண்டு என்று பொறுப்பாக பணியாற்றிக் கொண்டிருந்தவரை சிறுத்தை தாக்கினாலும், அதை அவர் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை.

மேலும் படிக்க | ஆட்டுக்குட்டிக்கும் தாய்ப்பால் கொடுக்கும் கோமாதாவின் பசு அன்பு

தாக்கிய விலங்கை அழகாக கையாண்டார் என்பதை வெறும் 13 விநாடிகளே செல்லும் வீடியோவில் பார்க்க முடிகிறது. சிறுத்தை வருவதை அந்த நீச்சல் குளத்தின் அருகே இருக்கும் மற்றொருவர் பார்ப்பதுடன் வீடியோ தொடங்குகிறது.

தாக்கிய சிறுத்தையை, லாவகமாக சமாளித்த அந்த மனிதர், தாக்குப்பிடித்துக் கொண்டு எழுந்து, அதை தன் கையில் உள்ள குச்சியால் விரட்டுவதைப் பார்க்க முடிகிறது.

குச்சியைக் கண்ட சிறுத்தை, சட்டென்று சீற்றத்தைக் கொண்டு அந்த இடத்தில் இருந்து வெளியேறுவது ஆச்சரியமாக இருக்கிறது. இப்படிப்பட்ட வித்தியாசமான வீடியோக்களை சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் பார்த்து மகிழ்கின்றனர்.

மகிழ்வதோடு மட்டுமல்லாமல், தான் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெறவேண்டும் என்ரு நினைத்து, வீடியோக்களை நண்பர்களுக்கு பகிர்கின்றனர். பகிரப் பெற்றவர்கள், தங்களுடைய நண்பர்களுக்கு வீடியோவை பகிர்வது என வீடியோக்கள் தொடர்ந்து வைரலாகின்றன.

மேலும் படிக்க | Viral Video: அட இது நான் தானா... குரங்கு குட்டியின் க்யூட் ரியாக்‌ஷன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News