தாகம் எடுத்த பாம்புக்கு தண்ணீர் கொடுக்கும் தருமப்பிரபு: வைரலாகும் வீடியோ

பாசமாக ஒரு நபர் பாம்பிற்கு தண்ணீர் கொடுக்கிறார். மலைப்பாம்பும் மிகவும் நிதானமாக அந்த நபரின் உள்ளங்கையில் வாயை வைத்து தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 7, 2022, 07:33 PM IST
தாகம் எடுத்த பாம்புக்கு தண்ணீர் கொடுக்கும் தருமப்பிரபு: வைரலாகும் வீடியோ  title=

Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்களும் படங்களும் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான புகைப்படம் இணையத்தை கலக்கி வருகின்றது.

பல்வேறு வகையான பாம்புகளின் அதிர்ச்சிகரமான மற்றும் ஆச்சரியமூட்டும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி வைரலாகின்றன. பொதுவாக மக்கள் பாம்புகளிடம் இருந்து விலகி இருக்க விரும்புவார்கள். எனினும், சிலர் பாம்புகளுடன் நட்புடனும் பழகுகிறாரள்.

ஒரு வினோத வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு நபர் தாகத்தில் உள்ள மலைப்பாம்புக்கு (Snake) தனது கைகளால் தண்ணீர் கொடுக்கிறார். மலைப்பாம்பும் மிகவும் நிதானமாக அந்த நபரின் உள்ளங்கையில் வாயை வைத்து தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கிறது. 

ALSO READ | அட கலிகாலமே!!! பாம்பை விழுங்கும் தவளை, வைரலாகும் வீடியோ

அந்த அற்புதமான வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோவில், மனிதர்களுக்கும் பாம்புக்கும் இடையே உள்ள நட்பைப் பார்த்து மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் Snakes.mania என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.

இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். இந்த வைரல் வீடியோவுக்கு (Viral Video) பல வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.

ALSO READ | Snake Dance: பனைமரத்தில் பாம்பு! மரமேறும் நாகப்பாம்பு நடனமாடும் வீடியோ வைரல்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News