இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி அருவியில் குளிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!
இங்கிலாந்து அணிக்கு இடையேயான தொடரினை அடுத்து தற்போது ஓய்வில் இருக்கும் மகேந்திர சிங் தோனி., தனது ஓய்வு நேரத்தினை சற்று வித்தியாசமாக செலவிட்டு வருகின்றார். அந்த வகையில் தற்போது ரான்சியில் இருக்கும் அருவியில் நேரத்தினை செலவிட்டுள்ளார்., அந்த வீடியோவினை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
டோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த வீடியோவினை "With 3 waterfalls around Ranchi, v cd do this whenever v wanted but now to do something like this after more than 10yrs brings back the good old memories. head massage for free." என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அதாவது.. ’ரான்சியில் இருக்கும் 3 அருவியில் எப்போது வேண்டுமென்றாலும் குளிக்கலாம், இலவசமான தலை மசாஜ் பெற்றுக்கொண்டு’ என குறிப்பிட்டுள்ளார்.
ஜார்க்கண்ட மாநிலம், ராஞ்சி நகரில் பிறந்த மகேந்திர சிங் டோனி 2004-ம் ஆண்டு இந்திய அணியில் இடம்பிடித்து தன் சர்வதேச கிரிக்கெட் பயணத்தைத் துவங்கினார். அணியில் சேர்ந்த சிறிது காலத்திலேயே தன் தனிப்பட்ட ஆட்டத்தினால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்திய அணி சரிவை நோக்கிச் செல்லும்போது இறுதியில் களமிறங்கி தன் அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றதில் டோனிக்கு பெரும் பங்கு உண்டு.
விளையாட்டிற்கு மட்டும் அல்ல தன் குடும்பத்திற்கு இணையான முக்கியதுவத்தினை அளிப்பவர் டோனி. விளையாட்டின் போது பயிற்சி, போட்டிகள் என பிஸியாக இருக்கும் இவர், ஓய்வின் போது குடும்பம், குழந்தை, வீடு என பிஸியாக மாறிவிடுகின்றார். சமூக வலைதளங்களில் விழிப்புடன் இருக்கும் டோனி, தன் குடும்ப நிகழ்ச்சிகளை குறித்தும் தொடர்ந்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றார். அந்த வகையில் தற்போது தானது ஸ்டன்ட் வீடியாவினை பகிர்ந்துள்ளார்.