விம்பிள்டன் டென்னிஷ் போட்டிகளை நேரில் கண்டு ரசித்த MKS!

லண்டனில் நடைப்பெற்று வரும் விம்பிள்டன் டென்னிஷ் போட்டிகளை, திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் நேரில் சென்று கண்டு ரசித்துள்ளார்!

Updated: Jul 12, 2018, 08:47 PM IST
விம்பிள்டன் டென்னிஷ் போட்டிகளை நேரில் கண்டு ரசித்த MKS!
Pic Courtesy: twitter/@mkstalin

லண்டனில் நடைப்பெற்று வரும் விம்பிள்டன் டென்னிஷ் போட்டிகளை, திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் நேரில் சென்று கண்டு ரசித்துள்ளார்!

லண்டன் சென்றுள்ள திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் அஙுகு நடைப்பெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளை நேரில் கண்டதாக தனது ட்விட்டர் பக்கதின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

போட்டியை காண சென்றபோது அவரது மனைவி துர்க்காவும் அவருடன் இருப்பது புகைப்படங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது. 

போட்டியை காண வந்த ஸ்டாலின் குடும்பத்தாரை இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் விரரான விஜய் அமிர்தராஜ் நேரில் சென்று கைகூப்பி வரவேற்றுள்ளார்.

மைதானத்தை சுற்றிப் பார்த்த இத்தம்பதியர் அங்கிருந்த சாம்பியன் டென்னிஸ் வீரரான எப்.ஜே.பெர்ரி சிலையின் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மைதானத்தில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.