அமெரிக்கா: ஒரு மாத குழந்தை ஒரு மூன்றாண்டு சாதனையை முறியடித்துள்ளது. ஆம்!! கேட்பதற்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். மோலி கிப்சன் என்ற இந்த குழந்தை 27 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட ஒரு கரு முட்டையிலிருந்து இந்த அக்டோபர் மாதம் பிறந்துள்ளது.
மோலி உருவான கரு முட்டை 1992 ஆம் ஆண்டு சேமிக்கப்பட்டது. இந்த கருமுட்டை 2020 பிப்ரவரி மாதம் வரை உறைந்த நிலையில் இருந்தது. அப்போதுதான் மோலியின் பெற்றோர்களான டினா மற்றும் பென் கிப்சன் அந்த கரு முட்டையை தத்தெடுத்தார்கள்.
அமெரிக்க (America) செய்தி நிறுவனங்கள், டெல்லிஸியை தளமாகக் கொண்ட குடும்பத்தில் அக்டோபர் மாத இறுதியில் மோலி பிறந்தார் என கூறியுள்ளன. அவரது கரு முட்டை உருவாகி 27 ஆண்டுகளுக்குப் பிறகு மோலி பூமியில் பிறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ள டீனா கிப்சன், “குழந்தை 2020 ஆம் ஆண்டில் மகிழ்ச்சியின் ஒளியாக வந்துள்ளது” என்று கூறினார்.
சுவாரஸ்யமாக, மோலி இந்த வகையான முந்தைய சாதனையை முறியடித்ததாக நம்பப்படுகிறது. அந்த சாதனையை செய்தது வேறு யாருமில்லை, அவரது சகோதரிதான். மோலியின் சகோதரி எம்மா, பிறந்தபோது, அதுவரையில் மிக அதிக காலத்திற்கு உறைந்திருந்த கரு முட்டையில் (Embryo) இருந்து பிறந்தார் என்ற சாதனையை செய்தார்.
ALSO READ: யார் இந்த கீதாஞ்சலி ராவ்? TIME Magazine-ன் கவர் பேஜில் இவர் வரக் காரணம் என்ன?
டினா "எம்மா எங்கள் வாழ்வில் வந்தது எங்கள் மகிழ்ச்சியை உச்சிக்கு கொண்டு சென்றது. இப்போது மோலி அந்த மகிழ்ச்சியை இன்னும் அதிகப்படுத்தியுள்ளார். எங்கள் வீட்டிலேயே அடுத்த உலக சாதனையும் நிகழ்ந்துள்ளது வேடிக்கையாக உள்ளது” என்று கூறினார்.
எம்மா நவம்பர் 2017 இல் பிறந்தார். அவர் 24 ஆண்டுகால கரு முட்டையிலிருந்து பிறந்தார். அப்போது, ஊடகங்களுக்கு பேட்டியளித்த டினா, பென் தம்பதி, தாங்கள் மலட்டுத்தன்மையுடன் (Infertility) போராடியதாகவும் இதனால் மிகுந்த மக உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறியிருந்தனர்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR