வாரணாசியில் மக்கள் தங்களது ஆதார் அட்டைகளை அடகு வைத்து வெங்காயம் பெறுகின்றனர்.
சுவை கூட்டும் காய்கறியாக சாப்பாட்டு வகைகளில் வெங்காயம் சேர்க்கப்படுகிறது. தற்போது இந்த வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. விலை ஏற்றம் அடைந்துள்ளதால் சில ஓட்டல்களில் வெங்காயத்தை அதிகமாக சேர்த்து செய்யப்படும் உணவு வகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ ரூ.30 என விற்கப்பட்டு வந்த பல்லாரி வெங்காயம் திடீரென ரூ.60க்கும், பின்பு ரூ.80க்கும் உயர்ந்து சதம் அடித்தது. இதனால் தற்போது உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் சில கடைகளில் ஆதார் அட்டைகளை அடகு வைத்து விட்டு வெங்காயங்களை கடனாக பொதுமக்கள் பெற்று செல்லும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது. இதை சமாஜ்வாடி கட்சியின் இளைஞரணி தொண்டர்கள் நடத்தி வருகின்றனர்.