ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள மிருகா திரைப்படத்தின் teaser!

நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் ராய் லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள மிருகா திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது!

Updated: Jan 12, 2020, 04:21 PM IST
ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள மிருகா திரைப்படத்தின் teaser!
Representational Image

நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் ராய் லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள மிருகா திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது!

தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்தின் டீஸர் தெலுங்கில் கர்ஜணா என்னும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குனர் J பார்த்திபன் இயக்கத்தில் உருவாக்கப்படும் இத்திரைப்படம், ஒரு புலியை முக்கியமான கதாபாத்திரமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது., மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் இந்த திரைபடத்திற்காக ஒரு VFX விலங்கை உருவாக்கியுள்ளனர் என்பது படத்தின் டீஸர் மூலம் நம்மாள் அறியமுடிகிறது. 

விரைவில் வரவிருக்கும் இந்த படத்தில் ராய் லட்சுமி மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரம் ஏற்றுள்ளனர்.

திரைப்படத்தில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையில் ஒரு சுவாரஸ்யமான ஒப்பீட்டை இயக்குனர் சொல்வதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு பன்னீர் செல்வம் கதை மற்றும் திரைக்கதையை வழங்கியுள்ளார், மேலும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராகவும் உள்ளார். இயக்குனர் J பார்த்திபன் இதுவரை விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார்., மேலும் நான் கடவுள் திரைப்படத்திற்காக படத்திற்காக முன்னணி இயக்குனர் பாலாவுடன் பணிபுரிந்துள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.