close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

‘தோழர் வெங்கடேசன்’ திரைப்படத்தின் trailer வெளியானது!

‘தோழர் வெங்கடேசன்’ திரைப்படத்தின் எதார்த்தமான ட்ரைலர் வெளியானது!

Updated: Jun 12, 2019, 08:56 PM IST
‘தோழர் வெங்கடேசன்’ திரைப்படத்தின் trailer வெளியானது!
Screengrab

‘தோழர் வெங்கடேசன்’ திரைப்படத்தின் எதார்த்தமான ட்ரைலர் வெளியானது!

அறிமுக இயக்குநர் மகாசிவன் இயக்கத்தில் அறிமுக நாயகன் அரிசங்கர், அறிமுக நாயகி மோனிகா சின்னகொட்லா நடிப்பில் உறுவாகியுள்ள திரைப்படம் ‘தோழர் வெங்கடேசன்’. காலா பிலிம்ஸ் தயாரிப்பில் உறுவான இத்திரைப்படத்தை வெளியிட முடியாமல் படக்குழுவினர் தவிக்க, தக்க நேரத்தில் இயக்குநர் சுசீந்திரன் இப்படத்தை பார்த்து, தன் பொறுப்பில் எடுத்து வெளியிடுகின்றார்.

எளிய, நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடைய வாழ்வில் ஏற்படும் ஒரு விபத்து, அதோடு தொடர்புடைய சட்ட சிக்கல்கள் எந்த விதமான தாக்கங்களையும், வலிகளையும், வேதனைகளையும், பின்னடைவுகளையும் ஏற்படுத்துகிறது என்பதை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.

அரசு போக்குவரத்து துறையில் இருக்கும் அவலங்களை சுட்டி காட்டி அதிர்வை இத்திரைப்படம் ஏற்படுத்தும் எனபெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திரைப்பட குழுவினர் காட்சி அமைப்புகள் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, சமீபத்தில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் நாயகனும், நாயகியும் பங்கேற்ற காட்சிகளை பல கோணங்களில் ட்ரான்தொழிட்நுட்பத்துடன் காட்சி படுத்தியுள்ளனர்.

வேதா செல்வம் ஒளிப்பதிவு பொறுப்பை ஏற்றுகொள்ள, இசை அமைப்பாளராக சகிஷ்னா அறிமுகமாகிறார்.

இத்திரைப்படத்திற்கு கதை, திரைகதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குவதோடு, ராஜேஷ் கண்ணாவோடு இணைந்து படத்தொகுப்பும் செய்திருக்கிறார் இயக்குனர் மகாசிவன். விரைவில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.