Viral Video: மச்சினிக்கு மாலையிட்ட மாப்பிள்ளை; மணமகனின் வீரதீர செயல்!

சமூக ஊடகங்களில் திருமணம் தொடர்பான பல வீடியோக்களைக் காணலாம். இதில் சில வீடியோக்களில் காணப்படும் மணமகள், மணமகனின் குறும்புகள் மிகவும் ரசிக்கக் கூடியதாக இருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 14, 2022, 03:42 PM IST
  • சமூக ஊடகங்களில் திருமணம் தொடர்பான பல வீடியோக்களை காணலாம்.
  • பல வித வேடிக்கையான நிகழ்வுகள் ரசிக்க கூடியதாக இருக்கும்.
  • சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகும் திருமணத்தில் மாலை மாற்றிக் கொள்ளும் வீடியோ.
Viral Video: மச்சினிக்கு மாலையிட்ட மாப்பிள்ளை; மணமகனின் வீரதீர செயல்!  title=

வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் திருமணம் தொடர்பான பல வீடியோக்களைக் காணலாம். இதில் பல வித வேடிக்கையான நிகழ்வுகளையும் நாம் காண்கிறோம். சில சமயங்களில் திருமண மேடையிலேயே மணமகனும், மணமகளும் செய்யும் சில குறும்புகள், சேட்டைகளை பார்த்தால், நமது சிரிப்பை அடக்கவே முடியாது. பல நேரங்களில் யாரும் எதிர்பார்க்காத பல விஷயங்களும் மணமேடையிலேயே நடந்து விடுகின்றன. இது திருமணத்துக்கு வந்துள்ள விருந்தினர்களையும் உறவினர்களையும் பல சமயம் அதிச்சிக்குள்ளாக்கும் . இவை இணையத்தில் பகிரப்பட்ட பின்னர் இணையவாசிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.

இது போன்ற ஒரு விடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ மாப்பிள்ளையின் அசாத்தியமான துணிச்சலான வீடியோ. இதில் நடப்பதை பார்த்து சிரிப்பை அடக்குவது கடினமாக இருக்கும். இந்த வேடிக்கையான வீடியோ இதுவரை நூற்றுக்கணக்கான பேர் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் நெட்டிசன்கள் இதை மிகவும் விரும்பி பகிர்ந்து கொண்டு தங்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். 

வைரலாகி வரும் இந்த வீடியோவில், திருமணத்தில் மாலை மாற்றிக் கொள்ளும் வைபவம் நடைபெறுகிறது. அவர் மணப்பெண் நின்று கொண்டிருக்கிறார். சுற்றியும் பல பெண்களும் நிற்கிறார்கள். மணமகள் முன்னால் சென்று மணமகனுக்கு மணமாலையை கொடுக்கிறார். இப்போது மாப்பிள்ளை முன்னோக்கி நகரும் போதே அவரது பார்வை மச்சினியின் மீது படுகிறது. சற்றும் யோசிக்காமல் அவள் கழுத்தில் மாலையை அணிவித்து மகிழ்ச்சியுடன் ஆட ஆரம்பிக்கிறார்.

மாப்பிள்ளையின் வீரதீர செயலை காட்டும் வீடியோவை இங்கே காணலாம்:

தங்கைக்கு மாலை அணிவித்த விதத்தை பார்த்து, மணமகள் அதிர்ச்சி அடைந்தார். இந்த வீடியோ its.chiku_ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. ஆனால், வீடியோவைப் பார்த்தால், இது வெறும் குறும்பு வீடியோ என்றும், இதற்கும் உண்மைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதும் தெளிவாகப் புரியும். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.இந்த வீடியோ இதுவரை மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | சாலையில் ஆண்டிகள் ஆடிய அட்டகாசமான டான்ஸ்: பார்த்து வாய் பிளந்த நெட்டிசன்கள்

மேலும் படிக்க | மாஸா பீடி பிடித்து பிலிம் காட்டும் தாத்தா: வாய் பிளக்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News