என்ன அழகு எத்தனை அழகு..தொகை விரித்து நடனமாடும் வெள்ளை மயில்: வீடியோ

ஒரு வெள்ளை மயில் தனது கூட்டாளரை ஈர்க்கும் பொருட்டு இனச்சேர்க்கை நடனம் செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 7, 2023, 03:35 PM IST
  • தொகை விரித்து நடனமாடும் வெள்ளை மயில்.
  • இன்றைய வைரல் வீடியோ.
என்ன அழகு எத்தனை அழகு..தொகை விரித்து நடனமாடும் வெள்ளை மயில்: வீடியோ title=

இன்றைய வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

மயில் இந்தியாவின் தேசீயப் பறவை. மயிலுக்கு முதல் எதிரி அதன் அழகிய தோகைப் பீலிகள்.  இதை வைத்து கை விசிறிகள் தயாரிக்க பலர் மயில்களைக் கொல்கின்றனர். இந்திய மயிலுக்கு நீல மயில் என்றொரு பெயரும் உண்டு.  காரணம் இதன் நிறம் மின்னும் நீலப் பச்சை.  இந்தொனேசியா, பர்மா இங்கெல்லாம் காணப்படும் மயில் பச்சை வண்ணம் கொண்டது என்பதால் அது பச்சை பயில் என்றழைக்கப் படுகிறது.

மேலும் படிக்க | வாக்கிங் வந்த தெருநாயை ஜாக்கிங் ஓட விட்ட மிக்கி மவுஸ் - வைரல் வீடியோ

உலகின் மிக அழகான பறவைகளில் ஒன்று மயில், அதன் வண்ணம், விசிறி போன்ற வால், நீண்ட வடிவான இறகுகள், இணையைக் கவர அவைகள் ஆடும் அற்புத நடனம் என பார்ப்பவர்களை எப்போதும் பிரம்மிக்க வைக்கின்றன. இதில் வெள்ளை நிற மயில் என்றால் இன்னும் சிறப்பு. பொதுவாக பறவைகளில் லூசிசம் அதிகமாக உள்ளது, இதன் விளைவாக, அவற்றின் இறகுகள் வெளிர், வெள்ளையாக இருக்கலாம் என்கின்றனர். இந்த மயில்கள், பிறப்பிலிருந்தே, நிறமிகளை இழக்கின்றன. அவை மஞ்சள் நிறத்தில் பிறக்கின்றன. மேலும் அவை வளரும்போது, ​​​​மஞ்சள் நிறம் மாறி மயில்கள் முதிர்ச்சியடையும் போது வெள்ளை நிறமாக மாறுகிறது.

இந்த நிலையில் வெள்ளை நிற மயில் ஒன்று சிலையின் உச்சியில் இருந்து பறந்து வந்து தரையிரங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆண் மயில்கள் தங்கள் இறகுகளைத் திறந்து, தங்கள் கூட்டாளர்களை ஈர்க்கும் முயற்சியில் நடனமாடுவதை நாம் நிறைய பேர் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு வெள்ளை மயில் இதைச் செய்வதை நீங்கள் எப்போதாவது பார்த்தீர்களா? இந்திய வன சேவை (IFS) அதிகாரி பர்வீன் கஸ்வான் சமீபத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். 

வெள்ளை மயிலின் நடன வீடியோவை இங்கே காணுங்கள்:

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோ சுமார் 10 வினாடிகள் கொண்டது. மேலும் இந்த வீடியோவுக்கு 4 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை கிடைத்துள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | என்னடா இது..ஓடும் ரயிலில் இப்படியா ஆடுவாங்க..கடுப்பேத்தும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News