2018-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவுக்கு அடுத்தபடியாக பத்ம விருதுகள் கருதப்படுகின்றன. இந்நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழர்கள், இந்த ஆண்டிற்கான இந்த பத்ம விருதுகளைப் பெருபவர்களுக்கு தமிழக துனை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...
பத்மஸ்ரீ விருதுபெறும் யோகா ஆசிரியை திருமதி வி நானாம்மாள், நாட்டுப்புறப் பாடகர் திருமதி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்,கிண்டி பாம்பு பண்ணையை நிறுவிய திரு ராமுலஸ் விட்டேகர்,பொறியாளர் திரு ராஜகோபாலன் வாசுதேவன், அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) January 26, 2018
"பத்மஸ்ரீ விருதுபெறும் யோகா ஆசிரியை திருமதி வி நானாம்மாள், நாட்டுப்புறப் பாடகர் திருமதி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்,கிண்டி பாம்பு பண்ணையை நிறுவிய திரு ராமுலஸ் விட்டேகர்,பொறியாளர் திரு ராஜகோபாலன் வாசுதேவன், அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்."
பத்மவிபூஷண் விருதுபெறும் திரு இளையராஜா அவர்களுக்கும், பத்மபூஷண் விருதுபெறும் தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் திரு ராமசந்திரன் நாகசுவாமி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். #PadmaAwards
— O Panneerselvam (@OfficeOfOPS) January 26, 2018
"பத்மவிபூஷண் விருதுபெறும் திரு இளையராஜா அவர்களுக்கும், பத்மபூஷண் விருதுபெறும் தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் திரு ராமசந்திரன் நாகசுவாமி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்"
என குறிப்பிட்டுள்ளார்.!