இணையத்தில் வைரலாகும் ‘அதே கண்கள்’ வில்லியின் ரொமேன்டிக் வீடியோ...

போஜ்புரி படங்களின் சூப்பர் ஸ்டார் பவன் சிங் மற்றும் பிரபல நடிகை மோனாலிசா ஆகியோர் ஊரடங்கின் போதும் கூட ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.

Updated: May 30, 2020, 10:26 PM IST
இணையத்தில் வைரலாகும் ‘அதே கண்கள்’ வில்லியின் ரொமேன்டிக் வீடியோ...

போஜ்புரி படங்களின் சூப்பர் ஸ்டார் பவன் சிங் மற்றும் பிரபல நடிகை மோனாலிசா ஆகியோர் ஊரடங்கின் போதும் கூட ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.

ஆம் சமீபத்தில் இணையத்தில் வெளியான இரு பிரபலங்களின் வீடியோக்கள் தான் இதற்கு சாட்சி. 'சோலியா கே கோலா டி' என்ற போஜ்புரி பாடலுக்கு போஜ்புரி நடிகை மோனாலிசா, பவன் சிங்குடன் இணைந்து சிறப்பாக நடனம் ஆடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இந்த பாடல் சூப்பர்ஹிட் போஜ்புரி படமான 'குண்டாய் ராஜ்' படத்தின் பாடலாகும். குடு தனோவா இயக்கத்தில் பவன் சிங் மற்றும் மோனாலிசா ஆகியோரின் நடிப்பில் வெளியான இந்த காதல் பாடலை போஜ்புரி  சினிமாவின் பிரபல பாடகர் கல்பனா பாடியுள்ளார். 

இந்த பாடலின் வரிகள் பிஹாரியில் எழுதப்பட்டுள்ளது. இப்படத்தில் பவன் சிங், மோனாலிசா, விக்ராந்த் சிங், ஆனந்த் மோகன், திலீப் சின்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மோனாலிசா மற்றும் பவன் சிங் பல படங்களிலும் பாடல்களிலும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இருவரின் பாடல்களும் யூடியூப்பில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அம்பர் குஷி பிலிம் என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்ட 'மெயின் உன்கோ சஜன் சுன் லியா' படம் வெளியாவதற்கு முன்பு போஜ்புரி பாக்ஸ் ஆபிஸ் மற்றும் ஒளிப்பதிவாளர்களிடையே பெரும் ஆதரவை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இசை நிறுவனமான DRJ ரெகார்ட்ஸ் நிறுவனம்,  மோனலிசாவைப் பற்றி பேசுகையில், “அவர் போஜ்புரி திரைப்படத்துறையில் உள்ள தைரியமான நடிகைகளில் ஒருவர்” என்று கூறுகிறது. மோனாலிசா ஒரு ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'பிக் பாஸ்' போட்டியாளராகவும் இருந்துள்ளார். தமிழ் ரசிகர்களுக்கு பிரபல தொலைக்காட்சி தொடரான அதே கண்கள் தொடரில் வில்லியாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மொழியாக்கம்: நடராஜன் விஜயகுமார்