வெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரல்லா’ FirstLook போஸ்டர்!!

ராய் லட்சுமி நடிப்பில் உருவான ‘சிண்ட்ரல்லா’ திரைப்படத்தின் FirstLook போஸ்டர் வெளியாகியுள்ளது!!

Written by - ZEE Bureau | Last Updated : Nov 4, 2018, 10:52 AM IST
வெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரல்லா’ FirstLook போஸ்டர்!!

ராய் லட்சுமி நடிப்பில் உருவான ‘சிண்ட்ரல்லா’ திரைப்படத்தின் FirstLook போஸ்டர் வெளியாகியுள்ளது!!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராய் லட்சுமி அடுத்ததாக ‘சிண்ட்ரல்லா’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் ராய் லட்சுமி 'கற்க கசடற' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அஜித்துடன் 'மங்காத்தா', ராகவா லாரன்ஸுடன் 'காஞ்சனா' படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அதையடுத்து 'அரண்மனை', 'சவுகார் பேட்டை' போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டுக்கு சென்றவர், 'ஜூலி 2' படத்தின் மூலம் பரபரப்பாக பேசப்பட்டார். 

இந்நிலையில், குழந்தைகளின் கனவு உலகத்தில் வலம் வரும் கதாபாத்திரம் சிண்ட்ரல்லா. இப்பாத்திரம் தேவதைக் கதைப் பிரியர்களின் அனுதாபத்தை அள்ளிய ஒன்றாகும். அப்படிப்பட்ட சிண்ட்ரல்லா என்கிற பெயரில் தமிழில் ஒரு படம் உருவாகிறது. 
 
ராய் லட்சுமி அந்த கதாபாத்திரம் ஏற்று பேண்டஸி ஹாரர் த்ரில்லர் எமோஷனல் டிராமாவாக இப்படம் உருவாகிறது. இப்படத்தை எஸ்.ஜே.சூர்யாவின் மாணவர் வினோ வெங்கடேஷ் இயக்குகிறார்.
 
அஸ்வமித்ரா இசையமைத்து வரும் சின்ட்ரெல்லா படத்திற்கு, லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘எஸ்.எஸ்.ஐ புரொடக்ஷன்' என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் விபரங்களை ட்விட்டரில் பகிர்ந்த, ராய் லட்சுமி, இந்த நவம்பர் மாதம் மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது என்றும், மேலும் இந்த படத்தை பற்றிய அப்டேட்டுகள் விரைவில் வரும் என்றும்  குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ராய் லட்சுமி நடிப்பில் உருவான சிண்ட்ரல்லா திரைப்படத்தின் FirstLook போஸ்டர் வெளியாகியுள்ளது. 

 

More Stories

Trending News