’நான் உனக்கு Pray பண்றேன்’ ரசிகைக்கு வீடியோ மூலம் ஆறுதல் தெரிவித்த சூப்பர்ஸ்டார்

உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவரும் ரசிகரின் மகளுக்காக சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 18, 2021, 11:37 AM IST

Trending Photos

’நான் உனக்கு Pray பண்றேன்’ ரசிகைக்கு வீடியோ மூலம் ஆறுதல் தெரிவித்த சூப்பர்ஸ்டார் title=

பெங்களூரைச் சேர்ந்த நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரின் மகள் சௌமியா என்பவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். சிகிச்சையில் இருக்கும் அவரும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். இதனையறிந்த சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், அந்த பெண்ணுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுளார். அதில், "ஹலோ சௌமியா.. எப்படிமா இருக்க? நல்லா இருப்பமா..!, உனக்கு ஒன்னும் ஆகாது. Sorry கண்ணா, கொரோனா இருக்கிறதால உன்னை நேர்ல வந்து பார்க்க முடியாது.  எனக்கும் கொஞ்சம் உடம்பு சரியில்லை. தைரியமா இரு. ஆண்டவன் இருக்கான். உனக்காக நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன். உனக்கு எல்லாம் சரியாகிடும் கண்ணா" என ஆறுதல் தெரிவித்துள்ளார்.

ALSO READ | Happy Birthday Super Star Rajinikanth: ‘ரஜினி’ என்பது பெயரல்ல ஒரு புரட்சி!!

ரஜினிகாந்தின் இந்த வாழ்த்து அந்த பெண்ணுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. உடல் நலக்குறைவால் இருக்கும் தீவிர ரசிகரின் பெண்ணுக்காக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட இந்த வீடியோ, அனைவரது மனங்களையும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள், சூப்பர் ஸ்டார் கூறியதுபோல், சிகிச்சையில் இருக்கும் பெண் விரைவாக குணமடைந்து நலம் பெற வேண்டும் என வாழ்த்தியுள்ளனர்.

அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் ஜாம்பாவான் சச்சின் தெண்டுல்கர், ஹர்பஜன் சிங் மற்றும் அரசியல், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். அண்ணாத்த படத்துக்குப்பிறகு ரஜினிகாந்த் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு அவர் யாருடன் அடுத்த படத்தை நடிக்க உள்ளார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

ALSO READ | 26 வருடங்களுக்கு பிறகு தீபாவளி தினத்தில் வெளியாகும் ரஜினி படம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR 

Trending News