ரஜினி பிறந்த நாள்: காலா படத்தின் இரண்டாவது போஸ்டர்

ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு, 'காலா' படத்தின் இரண்டாவது புதிய போஸ்டரை நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

Last Updated : Dec 12, 2017, 09:06 AM IST
ரஜினி பிறந்த நாள்: காலா படத்தின் இரண்டாவது போஸ்டர் title=

ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு, 'காலா' படத்தின் இரண்டாவது புதிய போஸ்டரை நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் 'காலா'. இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, 'காலா' படத்தின் புதிய போஸ்டரை தனுஷ் வெளியிட்டு இருக்கிறார். இதற்கு சமூகவலைத்தளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

ஹியூமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், 'வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்‌ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா உள்ளிட்ட பலர் ரஜினியோடு நடித்திருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இப்படத்துக்கு கபிலன், உமாதேவி பாடல்களை எழுதியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு முரளி, கலை ராமலிங்கம், எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத், சண்டைக் காட்சிகள் திலீப் சுப்பராயன், நடனம் சாண்டி, ஆடை வடிவமைப்பு அனுவர்தன், சுபிகா உள்ளிட்ட படக்குழுவினர் பணிபுரிந்திருக்கிறார்கள்.

நடிகர் தனுஷ் வெளியிட்டு உள்ள அந்தப் புதிய போஸ்டரில் கருப்பு உடையுடன், கரி பூசிய முகத்தில் ரஜினி மெர்சலாக பார்க்கிறார். இந்தப் போஸ்டர் வெளியான சில நிமிடங்களில் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

 

 

Trending News