ஜெட்லி மறைவு குறித்து 10 நாட்கள் முன்னரே உணர்ந்தேன் -ராக்கி சாவந்த்!

பாஜக-வின் மூத்த தலைவரும், நாட்டின் முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜெட்லி டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை காலமானார்.

Updated: Aug 25, 2019, 04:18 PM IST
ஜெட்லி மறைவு குறித்து 10 நாட்கள் முன்னரே உணர்ந்தேன் -ராக்கி சாவந்த்!

பாஜக-வின் மூத்த தலைவரும், நாட்டின் முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜெட்லி டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை காலமானார்.

ஜெய்ட்லியின் மறைவுக்குப் பிறகு அரசியல் தாழ்வாரங்களில் துக்க உணர்வு நிலவுகின்ற அதே வேளையில், பிரபல நடனக் கலைஞர், நடிகையுமான ராக்கி சாவந்த் ஜெய்ட்லியைப் பற்றி ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். பாலிவுட் பிரபலங்கள் சார்பாக சமூக ஊடகத்தின் வாயிலாக ராக்கி சாவந்த் துக்கம் அனுசரித்த போதிலும், பலர் அவரது செயலை ட்ரோல் செய்து வருகின்றனர்.

அண்மையில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், ஜெய்ட்லியின் மறைவு குறித்து தான் ஏற்கனவே அறிந்துக் கொண்டதாகவும், பல முறை அவருக்குத் தெரியப்படுத்த நினைத்ததாகவும் ராக்கி சாவந்த் தெரிவித்திருந்தார். சர்ச்சை ராணி என்று அழைக்கப்படும் ராக்கி சாவந்த் வீடியோவில், "நண்பர்களே வணக்கம், நம் பாஜக தலைவரான ஜெய்ட்லிஜி தற்போது நம்மிடம் இல்லை. நான் ஒரு வாரத்திற்கு முன்பு அல்ல 10 நாட்களுக்கு முன்பு அல்ல, அவரது இழப்பு குறித்து உணர்ந்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511) on

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ராக்கி "எனக்கு சில சமயங்களில் இதுபோன்ற கனவுகள் வருவதுண்டு. எனக்கு சில விஷயங்கள் தெரியும், ஆனால் அது எப்படி என்று எனக்குத் தெரியாது. அது தெய்வீக சக்தி. தேவியின் அருளால் எனக்கு இந்த தெய்வீக சக்தி இருக்கிறது. நான் சொல்ல வேண்டியதெல்லாம், அவர்களின் ஆத்மாக்களுக்கு மக்கள் அமைதியை ஏற்படுத்த வேண்டும். ஜெய்ட்லிஜி தனது பையில் இருந்து நல்ல பட்ஜெட்டுகளை மக்களுக்கு அளித்தவர், இந்தியா முழுவதும் அவரை நினைவில் வைத்திருக்கும். " என குறிப்பிட்டுள்ளார். 

ராக்கி சாவந்தின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக நடிகை ஸ்ரீ தேவி மறணத்தின் போதும் இதுபோன்ற வீடியோவினை ராக்கி சாவந்த் வெளியிட்டு சர்ச்சையினை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.