சுய இன்பம் வேண்டாமே...! 3 மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்த இளைஞரின் வாக்குமூலம்!

மூன்று மாதங்களாக சுய இன்பமே மேற்கொள்ளாமல் இருந்ததாக இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டதை அடுத்து, அதுகுறித்து விவாதம் எழுந்துள்ளது.   

Written by - Sudharsan G | Last Updated : Nov 9, 2022, 06:21 PM IST
  • பாலியல் சிந்தனைகளை தவிர்க்க முடிகிறது என இளைஞர் தெரிவித்துள்ளார்.
  • சிற்றின்பத்திற்காக வாழ்க்கை தொலைக்க வேண்டாம் என அறிவுரை.
  • சுய இன்பத்தை முற்றிலுமாக தவிர்க்க உள்ளதாகவும் கூறுகிறார்.
சுய இன்பம் வேண்டாமே...! 3 மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்த இளைஞரின் வாக்குமூலம்! title=

ரெட்டிட் சமூக வலைதளத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர்,  90 நாள்கள் சுய இன்பம் செய்யாமல் இருந்ததால், தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். மேலும், அந்த பழக்கத்தையே முற்றிலுமாக நிறுத்த முடிவெடுத்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். சில நாள்களுக்கு முன் அவரின் அந்த பதிவில்,"இன்றுடன் 90 நாள்கள் ஆகிறது. மூன்று மாதங்கள் ஆகிவிட்டதே எனக்கு தெரியவில்லை. 

இந்த 90 நாள்களில் என்னிடம் அதிக எனர்ஜி இருந்தது. முன்பெல்லாம் இயல்பான விஷயங்கள் கூட பாலியல் சிந்தனைக்கு இட்டுச்செல்லும். ஆனால், அந்த காலத்திட்டத்தில் அதை என் மூளை யோசிக்கவே இல்லை. மற்றவர்களுடன் இயல்பாக என்னால் பேச முடிந்தது. என்னால் ஜிம்மிலும் நன்றாக செயலாற்ற முடிந்தது, இதனால் இந்த 3 மாதங்களில் என் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | அதிக செக்ஸ் உணர்வு... பெண்களை சமாளிக்க முடியவில்லையா - ஆண்களுக்கு சில அட்வைஸ்!

சுய இன்பத்தை தவிர்த்ததால் அதிகாலையில் எழுந்தேன், ஜிம்மிற்கு சென்றேன், மனதுக்கு நிம்மதியாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை மீண்டும் சுய இன்பம் பழக்கத்திற்குள் நான் செல்ல மாட்டேன். அதை மேற்கொள்வதை விட, அந்த தவிர்க்கும்போதுதான் எனக்கு நன்மையாக இருக்கிறது. 

இதற்கும், எனது வாழ்க்கை சீரானதற்கும் எந்த தொடர்பும் இல்லை என சிலர் கூறலாம். ஆனால், மனநிலையை சீராக்க அதுவே உதவியது. சிற்றின்பத்திற்காக உங்கள் வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள் என்பதே என் அறிவுரை. பாலியல் ஆசைக்கு நீங்கள் அடிமையாகிவிடாதீர்கள். அதை விட்டுவிட்டு, உங்களை மேம்படுத்திக்கொள்ளுங்கள். வேறு யாருக்காகவும் அல்ல... உங்களுக்காக" என பதிவிட்டுள்ளார். 

இந்த பதிவு தற்போது இணையத்தில் சுய இன்பம் குறித்த பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. சுய இன்பம் மேற்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள், நன்மைகள் குறித்தும் பல்வேறு கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | திருமணத்தில் செக்ஸ் எவ்வளவு முக்கியமானது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News