நடிகர் கமல்ஹாசன் கடந்த 21-ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அவர், அன்று மதுரையில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கட்சிக் கொடி மற்றும் கட்சியின் பெயரை அறிவித்தார்.
இந்நிலையில், இன்று தனது ட்விட்டார் பக்கத்தில் கேரளம் அரசு புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள மனிதக் கழிவை அகற்றும் ரோபோ பற்றி பாராட்டி உள்ளார். அவரது ட்விட்டில் கூறியதாவது,
கேரளம் இந்தியாவுக்கே அறிமுகப்படுத்தியிருக்கும் மனிதக் கழிவை அகற்றும் ரோபோ இயந்திரம், சகமனிதன்பால் நமக்குள்ள மரியாதையையும் நம் சுயமரியாதையையும் பல படி உயர்த்தியிருக்கிற என பாராட்டி உள்ளார்.
The robot to clean human refuse is India's first step towards diginity to co- human beings. Congrats Kerala.
— Kamal Haasan (@ikamalhaasan) February 28, 2018
கேரளம் இந்தியாவுக்கே அறிமுகப்படுத்தியிருக்கும் மனிதக் கழிவை அகற்றும் ரோபோ இயந்திரம், சகமனிதன்பால் நமக்குள்ள மரியாதையையும் நம் சுயமரியாதையையும் பல படி உயர்த்தியிருக்கிற.
— Kamal Haasan (@ikamalhaasan) February 28, 2018