அநியாயம் பண்றிங்கடா... ராத்திரியில் ராக்கெட் விட்டவர் மீது வழக்குப்பதிவு - வைராலகும் வீடியோ!

அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனிகள், ஜன்னல்கள் மீது ராக்கெட் வெடியை பறக்கவிட்ட அடையாளம் தெரியாத நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  

Written by - Sudharsan G | Last Updated : Oct 25, 2022, 02:45 PM IST
  • இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியானது.
  • வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு
அநியாயம் பண்றிங்கடா... ராத்திரியில் ராக்கெட் விட்டவர் மீது வழக்குப்பதிவு - வைராலகும் வீடியோ! title=

நாடு முழுவதும் தீபாவளி நேற்று (அக். 25) கொண்டாடப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு பட்டாசு உள்ளிட்ட வாணவேடிக்கைகளால் பல்வேறு நகரங்கள் புகை மண்டலமாக மாறின. அந்த வகையில், பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில், ஒருவர் பட்டாசு வெடித்தது மட்டுமின்றி ஆபத்தான முறையிலும் வெடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைராலனது. 

மகாராஷ்டிர மாநிலம் தானேயில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் ஜன்னல்களில் ஒருவர் தீபாவளிக்கு ராக்கெட்டுகளை ஏவுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. போலீசார் தற்போது அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர், மேலும் அவர் மீது ஐபிசியின் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க | 5 யோகசனங்கள்... காற்று மாசுப்பாட்டில் இருந்து நுரையீரலை காக்க - இப்போதே இதை செய்யுங்கள் !

தானே மாவட்டத்தின் உல்ஹாஸ்நகர் நகரில் நடந்த இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதை அடுத்து, தானே போலீசாருக்கு இதுகுறித்து தெரியவந்தது. வீடியோவில், அந்த நபர் ஒரு குடியிருப்பு கட்டடத்தின் முன் நின்று ஒரு பெட்டியை வைத்திருப்பதைக் காண முடிகிறது. சில வினாடிகளுக்குப் பிறகு, பல தீபாவளி ராக்கெட்டுகள் பெட்டியில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக வெளியேறி, மேலே உள்ள அடுக்குமாடி மாடிகளின் பால்கனிகள் மற்றும் ஜன்னல்களைத் தாக்குகிறது.

அந்த நபர் மீது IPC பிரிவுகள் 285 (தீ அல்லது எரியும் பொருள் தொடர்பாக அலட்சிய நடத்தை), 286 (வெடிக்கும் பொருள் தொடர்பாக அலட்சியமாக நடத்தை) மற்றும் 336 (மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தீபாவளியால் அதிகரித்த காற்று மாசு! 16 சிகரெட் பிடித்த பாதிப்பை ஏற்படுத்திய பட்டாசு புகை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News