மாஸ் வசனங்களுடன் டிராபிக் ராமசாமி டிரைலர் வெளியீடு!

சமூக போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையப்படுத்தி `டிராபிக் ராமசாமி' என்ற பெயரில் திரைப்படம் தயாராகி உள்ளது. தற்போது இந்த படத்தின் டிரைலர் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

Last Updated : Jun 14, 2018, 03:46 PM IST
மாஸ் வசனங்களுடன் டிராபிக் ராமசாமி டிரைலர் வெளியீடு! title=

சமூக போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையப்படுத்தி `டிராபிக் ராமசாமி' என்ற பெயரில் திரைப்படம் தயாராகி உள்ளது. தற்போது இந்த படத்தின் டிரைலர் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

விக்கி இயக்கியிருக்கும் இந்த படத்தில் டிராபிக் ராமசாமியாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்திருக்கிறார். அவரது மனைவி கதாபாத்திரத்தில் ரோகினி நடித்துள்ளார். 

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

இதில், என் சாவு கட்டிங் வாங்குற கபோதி கையில் இல்லை, என் சாவு சொம்பு தூக்குற ஜால்ராங்க கையிலும் இல்லை. கடவுள் என் கூட இருக்கும் வரை எந்த பரதேசியும் என் உயிரை டச் பண்ண முடியாது என்று எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும் வசனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம், சேத்தன், தரணி, அம்மு ராமச்சந்திரன், பசி சத்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, சீமான், குஷ்பூ உள்ளிட்டோர் இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் ஜூன் 22-ம் தேதி திரைக்கு வெளியாக இருப்பதாக டிரைலரின் இறுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News