KGF அத்தியாயம் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு... வில்லனாய் பாலிவுட் நடிகர்!!

கே.ஜி.எஃப்-2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்றுள்ளது!

Last Updated : Jul 29, 2019, 01:11 PM IST
KGF அத்தியாயம் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு... வில்லனாய் பாலிவுட் நடிகர்!!  title=

கே.ஜி.எஃப்-2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்றுள்ளது!

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிக்கும் KGF படத்தின் இரண்டாவது பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ராக் விண்மீன் யஷ் நடிப்பில் KGF படம் இரண்டு பாகங்களாக உருவாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. KGF முதல் பாகம் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. கன்னட திரைப்படம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் படம் வசூல் குவித்துள்ளது.

கன்னடத்தில் ரூ.200 கோடி வசூலை தாண்டிய முதல் படம் என்ற பெருமை KGF பெற்றுள்ளது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிட்டார். கோலார் தங்க சுரங்கத்தில் பல காலமாக இருந்து வந்த அடிமை முறையை வெளிப்படுத்தும் விதமாக இப்படம் அமைந்திருந்தது. 

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து KGF இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது. இதற்கான படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அதீரா என்னும் பகைவன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. 

 

Trending News