பறை இசை பயிலும் நடிகை ஸ்ருதி ஹாசன்; வைரலாகும் Video!

சமீபத்தல் தான் பறை இசை பயிலும் வீடியோவினை தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...  

Updated: Aug 3, 2019, 03:11 PM IST
பறை இசை பயிலும் நடிகை ஸ்ருதி ஹாசன்; வைரலாகும் Video!
Screengrab

ஸ்ருதிஹாசன் ஒரு பன்முக நபர்... பாடுவது, நடிப்பது, நடனம் என அனைத்திலும் தனது தந்தை கமல்ஹாசனை போல் சிறந்து விளங்குபவர். இந்நிலையில் அவர் சமீப காலமாக பறை (தமிழ்நாடு மற்றும் இலங்கையில் பயன்படுத்தப்படும் ஒரு இசைக்கருவி) வாசிப்பை பழகி வருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தல் தான் பறை இசை பயிலும் வீடியோவினை தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், அவர் பறையின் கால்-தட்டு எண்ணை வாசிக்கின்றார். இணையத்தில் தற்போது வைரலாக உலா வரும் இந்த வீடியோ பார்பவரை நடனமாட வைக்கின்றது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Gotta get back to this !!!

A post shared by @ shrutzhaasan on

Gotta get back to this !!!(இந்த விஷயத்தைத் திரும்பப் பெற வேண்டும் !!!) என்ற தலைப்பில் ஸ்ருதி பகிர்ந்துள்ள இந்த வீடியோ 625 ஆயிரம் பார்வையாளர்களை தற்போது வரையில் பெற்றுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்பதில் ஐயம் இல்லை.

ஸ்ருதிஹாசனின் தீவிர ரசிகர்கள் அவரது திறமையைக் கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளனர். மேலும் பல இசைக்கருவிகளைக் கற்றுக்கொள்வதில் ஸ்ருதியின் ஆர்வத்தை பார்த்தும் பாராட்டி வருகின்றனர். அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு கலையை மாஸ்டரிங் செய்ததற்காக அவரது ரசிகர்கள் பலர் அவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

முன்னதாக விஜய் சேதுபதியின் லாபத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள ஸ்ருதிஹாசன், தற்போது ட்ரெட்ஸ்டோன் என்ற அமெரிக்கத் தொடரின் வேலைகளில் பிஸியாக உள்ளார் எனவும் கூறப்படுகிறது.