இணையத்தில் ட்ரண்ட் ஆகிவரும் "SPPR Trailer 2"!

படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!

Last Updated : Dec 12, 2017, 02:20 PM IST
இணையத்தில் ட்ரண்ட் ஆகிவரும் "SPPR Trailer 2"! title=

சந்தானம் நடிப்பில் பெரும் எதிர்பார்புடன் வெளிவரும் திரைப்படம் "சக்க போடு போடு ராஜா". இத்திரைப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரண்ட் ஆகியுள்ளது!

அறிமுக இயக்குனர் சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் "சக்க போடு போடு ராஜா". விடிவி கணேஷ் இப்படத்தின் தயாரிக்கின்றார். "சர்வர் சுந்தரம்" நாயகி வைபவி ஷாந்தாலியா சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்கின்றார். காமெடி நடிகர் விவேக் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். 

முன்னணி நடிகர்களின் படங்களில் இதுவரை காமெடி செய்துவந்த விவேக், இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து காமெடி நடிகராக ஒப்பந்தம் ஆகியிருப்பது கோலிவுட் வட்டாரத்திலும், தமிழ் திரையுலக ரசிகர்களின் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!

Trending News