பாதாம் சாப்பிடும் அணிலின் வீடியோ வைரல்

அணில் ஒன்று ஆசை ஆசையாய் பாதாம் சாப்பிடும் வீடியோ வைரலாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 6, 2022, 03:00 PM IST
  • பாதாம் சாப்பிடும் அணில் வீடியோ
  • 9 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்
  • அணில் பாதாம் சாப்பிடுமா? என வியப்பு
பாதாம் சாப்பிடும் அணிலின் வீடியோ வைரல் title=

துருதுருவென இருக்கும் அணிலை மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் காண்பதெல்லாம் அபூர்வம். மனித நடமாட்டத்தைக் கண்டாலே அவை ஜெட் வேகத்தில் ஓடிவிடும். கிராம பகுதிகளில் அணிலைக் அதிகளவில் காணலாம் என்றாலும் அருகில் எல்லாம் செல்ல முடியாது. ஆனால் இப்போது வைரலாகியிருக்கும் வீடியோவில், பாதாமுக்காக அணில் ஒன்று வீடு தேடி வந்துள்ளது தெரியவந்திருக்கிறது. மேலும், பாதாமை கண்டவுடன் ஆசை ஆசையாய் சாப்பிடுகிறது. இதனை பார்க்கும் அனைவருக்கும் வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.

மேலும் படிக்க | Monkey Viral Video: படுக்கையில் குரங்கின் உல்லாச செயல்; வைரலாகும் வீடியோ

அந்த வீடியோவில் பெண் ஒருவர் நிறைய பாதாம்களை கையில் வைத்துக் கொண்டு அணிலிடம் நீட்டுகிறார். வீடியோ எடுக்கப்படுவதை பார்த்துக் கொண்ட அணிலும் சில நொடிகள் அமைதியாக இருந்துவிட்டு வேட்டையை விடக்கூடாது என்கிற ரீதியில் பாதாமை கடகடவென எடுத்து சாப்பிடுகிறது. அணில் பாதாம் சாப்பிடுவதை முதன்முறையாக பார்க்கும் பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். அந்த அணில் நிச்சயமாக வீட்டில் வளர்க்கப்பட்ட அணிலாக தான் இருக்க வேண்டும். ஏனென்றால் மனிதர்களை பார்த்து நொடிபொழுதில் மறையும் அணிகளுக்கு மத்தியில் கையில் இருக்கும் பாதாமை எடுத்து சாப்பிடுவது எல்லாம் வீட்டில் வைத்து வளர்க்கப்பட்ட அணில்கள் மட்டுமே செய்யக்கூடிய ஒன்று. 

விலங்கு பிரியராக அணிலை வளர்த்தவர் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் அதனை விரும்பி வீட்டில் வளர்த்து இருக்கிறார். செல்லமாக வளர்க்கும் அணிலுக்கு அவர் பாதாம் ஊட்டி மகிழ்ந்திருக்கிறார். இணையத்தில் வெளியிடப்பட்ட வீடியோவும் நெட்டிசன்களின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுவரை டிவிட்டரில் மட்டும் இந்த வீடியோவை சுமார் 9 மில்லியனுக்கும் அதிகமானார் பார்வையிட்டுள்ளனர். 

மேலும் படிக்க | பசுவுக்கு அடித்த ஷாக், பாய்ந்துவந்து காப்பாற்றிய நிஜ ஹீரோ: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News