சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்துப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிவிட்டரில் பக்கத்தில் அறிவிக்கபப்ட்டது.
தற்போது ரஜினி, பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா மற்றும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2.O படத்தில் நடித்து வருகிறார். இதில் காலா படம் வரும் ஏப்ரல் 27-ம் நாள் திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினி கடந்த சில ஆண்டுகளாகவே அவர் தனது விருப்பட்ட இயக்குனர் படத்திலேயே நடத்து வந்தார். ஆனால் கபாலி படத்தில் இளம் இயக்குனரான பா. ரஞ்சித்துக்கு வாய்ப்பளித்தார். தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் அவருக்கு காலா படம் மூலம் வாய்ப்பு வழங்கினார்.
தற்போது மூன்று படங்களை இயக்கிய இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்-க்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
புதிய அரசியல் கட்சியைத் தொடங்கிய கமல்ஹாசன் புதிய படங்களில் நடிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். வெளிவர இருக்கும் இரு படங்களைத் தொடர்ந்து நடிக்கும் எண்ணம் இல்லை என்றும், தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் தான் அரசியலில் ஈடுபடபோவதாகவும், எனது அரசியல் ஆன்மீக அரசியல். விரைவில் கட்சி பற்றி அறிவிப்பு வெளிவரும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
ஆனால் காலா, மற்றும் 2.O படங்களை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினி, அரசியல் கட்சி எப்பொழுது ஆரம்பிப்பார் என அனைவரும் எதிர்பார்ப்பாகவே உள்ளது.
#Superstar’s next colossal production with @SunPictures.#SuperstarwithSunPictures @superstarrajini @karthiksubbaraj pic.twitter.com/UDbohFTQw3
— Ram Muthuram Cinemas (@RamCinemas) February 23, 2018