கோவிலில் நடைபெற்ற விழாவில் மக்களுடன் மக்களாக தமிழக அமைச்சர் SP வேலுமணி நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.....
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று கோவையில் நடைபெற்ற கோவில் திருவிழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, கோவில் விழாவில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியான ஒயிலாட்ட நடன கலைங்கர்களுடன் அமைச்சர் வேலுமணி நடனமாடி அசத்தியுள்ளார்.
#WATCH Tamil Nadu Minister SP Velumani(first from left) dances during a temple festival in Coimbatore's Kaikolapalayam yesterday pic.twitter.com/9v1Pa5ut8c
— ANI (@ANI) November 5, 2018
இந்த வீடியோவனது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அமைச்சர் வேலுமணி உடன் மற்ற நடன கலைஞர்களும் நடனமாடும் காட்சியானது இணையத்தில் பயங்கர வைரலாக பரவி வருகிறது. அமைச்சர் வேலுமணி தற்போது நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் தமிழ்நாட்டில் சிறப்புத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். சமீபத்தில், இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றிய செய்திகளில் வெளிவந்தது, இந்த குட சாட்டுகளை அவர் தவறாகவும் ஆதாரமற்றவராகவும் கூறி மறுத்தது குறிப்பிடத்தக்கது.