காரில் இந்த நம்பர் தான் வேண்டும்! ரூ. 25 லட்சம் கட்டி வாங்கிய நபர்! என்ன நம்பர் தெரியுமா?

ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு நபர் ‘9999’ என்ற ஃபேன்சி பதிவு பதிவு எண்ணிற்காக ரூ. 25.5 லட்சம் கட்டணமாக செலுத்தி உள்ளார். இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 27, 2024, 07:19 AM IST
  • ஃபேன்சி பதிவு எண்களுக்கான நடந்த ஏலம்.
  • 'TG-09 9999' என்ற பதிவு எண்ணிற்கு நடந்த மோதல்.
  • ரூ. 25,50,002 செலுத்தி இந்த எண்ணை வாங்கியுள்ளார்.
காரில் இந்த நம்பர் தான் வேண்டும்! ரூ. 25 லட்சம் கட்டி வாங்கிய நபர்! என்ன நம்பர் தெரியுமா? title=

நம்மில் பலருக்கும் புதிதாக கார் வாங்க வேண்டும் என்று ஆசை இருக்கும். அதிலும் ஒரு சில நபர்களுக்கு நமக்கு பிடித்த எண்ணை காரில் நம்பர் பிளேட்டாக வைக்க எண்ணம் இருக்கும். ஆனால் அதற்கான கூடுதல் தொகையை எண்ணி அதனை வாங்க மறுத்து இருப்போம். ஒரு சிலர் பணத்தை கட்டி ஃபேன்சி பதிவு எண்ணை வாங்குவது வழக்கம். ரூ.5,000, 10,000 முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை செலுத்தி ஃபேன்சி பதிவு எண்களை வாங்குவார்கள். ஆனால் சமீபத்தில் தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்து ஆணையம் நடத்திய ஆன்லைன் ஏலத்தில், ஹைதராபாத்தை சேர்ந்த கார் உரிமையாளர் ஒருவர், ‘9999’ என்ற ஆடம்பரமான பதிவு எண்ணை வாங்க, 25.5 லட்சம் கட்டணமாக செலுத்தி உள்ளார்.

மேலும் படிக்க | பிரஷர் குக்கரில் இந்த உணவுகளை ஒருபோதும் சமைக்க வேண்டாம்!

ஃபேன்சி பதிவு எண்களுக்கான நடந்த ஆன்லைன் ஏலத்தில் '9999' என்ற எண் அதிகபட்சமாக 25,50,002 ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டது, அவர் TG-09 9999 என்ற பதிவு எண்ணிற்காக இந்த தொகையை துறைக்கு செலுத்தினார் என்று RTO அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய ஹைதராபாத் இணை போக்குவரத்து ஆணையர் சி ரமேஷ், “திங்கட்கிழமை நடைபெற்ற ‘9999’ என்ற ஃபேன்சி எண் ஏலத்தில் 11 பேர் கலந்து கொண்டனர். ஏலத்தின் முடிவில் அந்த எண் ரூ.25.5 லட்சத்துக்கு ஏலம் போனது. இதுவே ஒரு ஃபேன்சி எண்ணுக்கான அதிகபட்ச ஏல தொகையாகும், இது தெலுங்கானாவில் புதிய சாதனையாக உள்ளது” என்று தெரிவித்தார்.

இணையத்தில் வைரலான பேன்சி நம்பர்

அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த இந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரல் ஆகியது. காட்டுத்தீ போல் பரவிய இந்த செய்தியை அறிந்து பலரும் கேள்வி எழுதி வருகின்றனர். இந்த அபத்தமான நம்பர் பிளேடிற்காக இவ்வளவு தொகையை செலவழிக்க வேண்டுமா என்று கூறி வருகின்றனர். சில பயனர்கள் அவரது பணத்தை அவர் எப்படி வேண்டுமானாலும் செலவழிக்க உரிமை உண்டு என்று கூறினார்கள். மற்றவர்கள் இதுபோன்ற ஆடம்பரமான செலவுகள் பல சமூக தீமைகளுக்கு வேர் ஊன்றும் என்றும், இந்த பணத்தை வைத்து பல ஏழைகளுக்கு உதவி இருக்கலாம் என்று கூறினர். 

"OMG..! ஒரு ஃபேன்ஸி எண்ணுக்கு 26 லட்சமா? அதற்கு நான் ஒரு ஏழை ஏழை குடும்பத்திற்கு 1BHK ஃப்ளாட்டை இலவசமாக வழங்கியிருப்பேன், கடவுள் என்னை பணக்காரர் ஆக்காததால் எனக்கு துரதிர்ஷ்டம்" என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். "ஏன் ஒரு நபர் ஒரு நம்பர் பிளேட்டுக்கு இவ்வளவு பணத்தை செலவிடுகிறார். ஒவ்வொரு தனிநபருக்கும் அவர் பணத்தை செலவிட உரிமை உண்டு. ஆனால் ஈகோ அல்லது அந்தஸ்துக்காக இவ்வளவு பெரிய பணத்தை செலவிடுவது சரியா?” என்று மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஆகஸ்டில் ‘9999’ என்ற பேன்சி எண் ரூ.21.6 லட்சத்திற்கு ஏலம் போய் இருந்தது. RTOவில் உங்களுக்கு பிடித்த பேன்சி நம்பரை வாங்க ரூ.50,000 செலுத்தி முன்பதிவு செய்து ஏலத்தில் பங்கு பெறலாம். 

மேலும் படிக்க | நம்பர் பிளேட் மூலம் வாகன உரிமையாளர் விவரங்களை சரிபார்ப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News