அடுத்த கமல் தனுஷ் தான் தனுஷேதான் -நடிகை கஸ்தூரி!

வடசென்னை படத்தின் டீசரை பார்த்து அடுத்த கமல் தனுஷ் தான் என நடிகை கஸ்தூரி புகழாரம்!!

Last Updated : Jul 29, 2018, 04:10 PM IST
அடுத்த கமல் தனுஷ் தான் தனுஷேதான் -நடிகை கஸ்தூரி!

வடசென்னை படத்தின் டீசரை பார்த்து அடுத்த கமல் தனுஷ் தான் என நடிகை கஸ்தூரி புகழாரம்!!

நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைக்கா ப்ரொடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வடசென்னை.

இப்படத்தில் ராம், இயக்குனர் அமீர், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிசோர், கருணாஸ் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். 

தனுஷின் பிறந்த நாளான நேற்று இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டனர். அதில், ஒருத்தன் செத்தா முடியுற சண்டையாடா இது? என மிரட்டல் வசனத்தில் பேசும் தனுஷ், போலீஸ் கலவரத்தின் இடையே திருப்பி அடிக்கலைனா, இவனுங்க நம்மல அடிச்சு ஓடவிட்டுக்கிட்டே இருப்பானுங்க என்ற வசனத்தையும் பேசியிருக்கிறார்.

மேலும் தனக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுடன் முத்தக்காட்சியிலும் நடித்திருக்கிறார். இது குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ‘வடசென்னை டீஸர் பாத்துட்டேன். அடுத்த கமல் தனுஷ் தான், தனுஷேதான்!’ என்று பதிவிட்டுள்ளார். 

 

More Stories

Trending News