ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதை கண்டித்து காட்சி படத்தை மாற்றியது twitter!

மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டர் அதன் பின்னணியையும் அதன் காட்சி படத்தையும் கருமை நிறத்தில் மாற்றியுள்ளது.

Updated: Jun 1, 2020, 01:40 PM IST
ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதை கண்டித்து காட்சி படத்தை மாற்றியது twitter!

மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டர் அதன் பின்னணியையும் அதன் காட்சி படத்தையும் கருமை நிறத்தில் மாற்றியுள்ளது.

ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிளாக் லைவ்ஸ் மேட்டர் என்ற முழக்கத்துடன் அமெரிக்கா முழுவதும் வெளிவந்த ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களுக்கு ஒற்றுமைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டர் அதன் பின்னணியையும் அதன் காட்சி படத்தையும் கருமை நிறத்தில் மாற்றியுள்ளது.

அதேவேளையில் ட்விட்டர் தனது பயோ-வை “#BlackLivesMatter” எனவும் மாற்றியுள்ளது. நீல நிற பறவைக்கு பதிலாக கருப்பு நிற பறவையை மாற்றியுள்ளது.

READ | அறிந்துக்கொள்வோம்; ட்விட்டரில் ஒரு திட்டமிடப்பட்ட ட்வீட்டை அமைப்பது எவ்வாறு?

இதுதொடர்பான விளக்கத்தை அளிப்பதற்கு ட்விட்டர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது., 

மினியாபோலிஸில் கறுப்பின மனிதர் ஜார்ஜ் பிலாய்டின் மரணத்திற்கு எதிராக அமெரிக்காவின் பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பிலாய்ட் கொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

பிலாய்டின் மரணத்தில் ஈடுபட்டதற்காக மினியாபோலிஸில் நான்கு காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திங்கள்கிழமை (மே 25) அன்று நிகழந்த இந்த சம்பவத்தில், மோசடி வழக்கு சம்பந்தமாக விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நபர் ஒருவரை காவல்துறை அதிகாரி அடித்து துன்புறுத்துகிறார். பின்னர் அந்த நபர்  மூச்சுத்திணறல் காரணமாக இறக்கிறார். இந்த சம்பவத்தை அடுத்து பலியான நபருக்கு நியாயம் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈட்படுகின்றனர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறை அதிகாரி ஒருவர் கருப்பரினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவரின் கழுத்தை சுமார் 8 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்த காட்சி இணையத்தில் வைரலாகியது, தொடர்ந்து அவரது மரணச் செய்தி நாடெங்கும் பரவி அமெரிக்க மக்களை தட்டி எழுப்பிவிட்டது.

READ | தனது ஊழியர்களுக்கு "work from home" ஐ நிரந்தரமாக்கிய ட்விட்டர்...

காவல்துறை வன்முறைக்கு ஜார்ஜ் பிளாய்ட் பலியானார் என்று வன்முறைகள் ஆங்காங்கே வெடிக்கத் தொடங்கியுள்ளன. இந்த ஒரு சம்பவம் மட்டும் காரணமல்ல அமெரிக்காவில் தலைவிரித்தாடும் நிறவெறிகளுக்கு எதிரான போராட்டமாகவும் இந்த போராட்டம் வலுபெற்று வருகிறது. மினியாபொலீசில் துவங்கிய ஆர்ப்பாட்டம், நியூயார்க், துல்சா, லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய இடங்களிலுக்கும் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.