பிரபல இடுகை செயலியான ட்விட்டர் தற்போது தனது வலை பதிப்பில் அட்டவணை ட்வீட் மற்றும் வரைவு அம்சங்களை ஆதரிக்கும் என தெரிவித்துள்ளது.
சில நேரங்களில் நீங்கள், உங்களின் ட்விட்டுக்கான சிறந்த யோசனையைப் பெறலாம், ஆனால் அதை உடனே இடுகையிட வேண்டாம் எனவும் நினைக்கலாம். எனவே உங்கள் ட்விட்டர் பதிவை பிற்காலத்தில் பதிவேற்றுவதற்காக அட்டவனை இட்டு வைக்கலாம்.
ஆனால் இந்த அம்சத்தினை ட்விட்டர் தனது வலைபதிப்பில் இத்துனை நாட்களாக அறிமுகம் செய்யாமல் வைத்திருந்தது. எனினும் பல மூன்றாம் தரப்பு வழங்குநர்கள் இந்த அம்சத்தை அளித்திருந்த நிலையில், தற்போது அட்டவணை ட்விட்டர் பதிவிற்கான அனுகலை ட்விட்டர் தற்போது வழங்கியுள்ளது.
இந்த அம்சத்தின் மூலம் நீங்கள் ட்விட்டரை அதன் வலை பதிப்பிலிருந்து பயன்படுத்தினால், உங்கள் ட்வீட்களை உருவாக்கும் போது புதிய விருப்பங்களைக் காண்பீர்கள். நீங்கள் ட்வீட்களை ஒரு வரைவாக சேமிக்கலாம், மேலும் ஒரு குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் அனுப்ப திட்டமிடலாம்.
- ட்விட்டரில் ஒரு திட்டமிடப்பட்ட ட்வீட்டை அமைப்பது எவ்வாறு?
இந்த அம்சம் சிறிது காலமாக சோதனைக்கு உட்பட்டது, இப்போது ட்விட்டரின் வலை பதிப்பில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு ட்வீட்டைத் திட்டமிட, பயனர்கள் உரையை எழுத பெட்டியைத் திறந்து, விருப்பங்களிலிருந்து காலெண்டர் ஐகானைத் தேர்வு செய்ய வேண்டும். உங்கள் நேர மண்டலத்தின் படி, நீங்கள் விரும்பும் தேதி மற்றும் நேரத்திற்கு ட்வீட்டை திட்டமிட புதிய சாளரம் திறப்பதை நீங்கள் காண்பீர்கள். மேலும் படிக்க - தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு ட்விட்டர் புதிய பதில் அம்சத்தை சோதிக்கிறது
ட்வீட்டுகளை புரோகிராமிங் செய்வது பல்வேறு காரணங்களுக்காக பயனுள்ளதாக இருக்கும். உங்கள் சப்ஸ்க்ரைபர்களுடன் பல எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் விருப்பமும் உங்களுக்கு இருக்கலாம். ஆனால், அதையெல்லாம் குறுகிய காலத்தில் வெளியிட நீங்கள் தயங்கலாம். கூடுதலாக, ட்விட்டர் சமூகத்தில் உள்ள சிலர் தங்கள் ட்வீட்டுகள் எப்போது அதிக ஈடுபாட்டைப் பெறுகின்றன என்பதைக் கண்டறிய கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். எனவே, ஒரு திட்டமிடல் செயல்பாடு இங்கேயும் பயனுள்ளதாக இருக்கும்.
அதே நேரத்தில் நீங்கள் ஏற்கனவே திட்டமிட்டுள்ள ஒரு ட்வீட்டைப் பார்க்க வேண்டும் என்றாலோ அல்லது நீங்கள் ஏற்கனவே சேமித்த உள்ளடக்கத்தைப் சரிபார்க்க விரும்பினாலோ, அதே விண்டோவில் நீங்கள் காணும் “Scheduled Tweets” அழுத்த வேண்டும்.
திட்டமிடப்பட்ட ட்வீட்டுகளும், வரைவில் உள்ளவையும் தனித்தனி பட்டியல்களில் இருந்தாலும் ஒரே பிரிவில் இருக்கும். எனவே, நீங்கள் வாரத்திற்கான ட்வீட்களின் நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கிறீர்கள் என்றால். பிரிவை மாற்றாமல் பயனர்கள் வரைவுகளுக்கும் திட்டமிடப்பட்ட ட்வீட்டுகளுக்கும் இடையில் ஒரு பட்டியலிலிருந்து மற்றொரு பட்டியலுக்கு செல்லலாம்.
- வரைவுகளை எவ்வாறு சேமிப்பது?
வலை பதிப்பிலிருந்து ஒரு ட்வீட்டைச் சேமிக்க, ட்விட்டர் பயன்பாட்டின் அதே இயக்கவியலைப் பின்பற்றவும். நீங்கள் ஒரு அம்சத்தை நீக்கப் பயன்படுத்தும் எக்ஸ் ஐகானை அழுத்த வேண்டும். நீங்கள் அதை சேமிக்க வேண்டுமா அல்லது நிராகரிக்க வேண்டுமா என்று ட்விட்டர் உங்களிடம் கேட்கும். சேமி என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இடுகை ஏற்கனவே "வரைவுகள்" (drafts )பட்டியலில் உள்ள "அனுப்பப்படாத ட்வீட்ஸ்" பிரிவில் இருக்கும்.
ட்வீட்களை திட்டமிடும் திறன் சில காலமாக ட்வீட் டெக்கில் கிடைத்துக்கொண்டிருக்கிறது. ட்வீட்களை வரைவுகளாக சேமிக்கும் திறன் ட்விட்டர் மொபைல் பயன்பாட்டில் கிடைக்கிறது. இந்த இரண்டு அம்சங்களையும் இப்போது ட்விட்டர் வலைத்தளத்திலும், ட்விட்டர் பிடபிள்யூஏவிலும் பயன்படுத்தலாம்.
மொழியாக்கம்: லீமா