கொரோனா வைரஸ் பரவலில் இருந்து பாதுகாப்பாக இருக்க பொதுமக்கள் கூடும் இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டுவதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நபர் உள்ளாடையை மாஸ்க்காக மாட்டிக்கொண்டு விமானத்தில் ஏறியுள்ளார். அவரின் அருகில் இருந்த சக பயணி ஒருவர், இதுகுறித்து விமான பணிப்பெண்களிடம் புகார் தெரிவிக்க, கடும் வாக்குவாதத்திற்குப் பிறகு அவர் விமானத்தில் இருந்து இறக்கவிடப்பட்டார். மேலும், அவருக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ் நிர்வாகம் இனிமேல் பயணிக்க தடையும் விதித்துள்ளது.
ALSO READ | Bizarre Theft: பாலத்தையே திருட முடியுமா? மலைக்க வைக்கும் புதுவித திருட்டு
ஆடம் ஜேன் என்ற நபர் போர்ட்லாடர்டேல் நகரில் இருந்து வாஷிங்டன் செல்வதற்காக யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறியுள்ளார். அப்போது, பயணிகள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்பதால், அவரும் பெண்களின் தோங் என்ற உள்ளாடையை மாஸ்க்காக அணிந்திருந்துள்ளார். இதனைக் கவனித்த சக பயணிகள், விமான பணிப்பெண்களிடம் குற்றாச்சாட்டியுள்ளனர்.
Florida man banned from United Airlines for wearing a thong as a mask pic.twitter.com/siIPmGe9d4
— Chief Nerd (@TheChiefNerd) December 17, 2021
இதனையடுத்து ஆடம் ஜேன் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்த விமானநிலைய அதிகாரிகள், அவர் அணிந்திருந்த மாஸ்க்கை கழற்றிவிட்டு அனுமதிக்கப்பட்ட மாஸ்க்கை போடுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், சாதாரண மாஸ்க் கொடுக்கும் பாதுகாப்பு, தான் அணிந்திருக்கும் தோங் உடையும் கொடுப்பதாக ஆடம் ஜேன் தெரிவித்துள்ளார். அவரின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த அதிகாரிகள், அனுமதிக்கப்பட்ட மாஸ்கை போட்டுக்கொண்டால் பயணிக்க முடியும் இல்லையென்றால் கீழே இறங்குமாறு கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு கட்டுப்படாத ஆடம்ஜேன், வெளியில் மாஸ்க் அணிந்து கொண்டு வருபவர்கள், விமானத்திற்குள் அமர்ந்து சாப்பிடவும், குளிர்பானம் அருந்த அனுமதிப்பது ஏன்? இதனால் நோய் பரவாதா? என பதில் கேள்வி எழுப்பியுள்ளார். ஆடம் ஜேனின் கேள்விகள் குதர்க்கமாக இருப்பதை அறிந்த அதிகாரிகள், விமானத்தில் இருந்து இறங்கிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து விமானத்தில் இருந்து கீழே இறங்கிய ஆடம் ஜேன், கொரோனா விதிமுறைகள் மற்றும் தளர்வுகள் குறித்து விமர்சித்துள்ளார். இதேபோல், முன்பு ஒருமுறை ஆண்களின் உள்ளாடையை அணிந்து கொண்டு விமானத்தில் ஏறியுள்ளார். அதுவும் சர்ச்சையாகவும், வைரல் செய்தியாகவும் மாறியது.
ALSO READ | வால்பாறையில் ஆட்டை வேட்டையாடும் சிறுத்தை புலி Video Viral
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR