வீடியோ: கேள்விக்கு மேல் கேள்வி கேட்கும் பாலா மற்றும் அனிதா; தத்தளிக்கும் ஆரி!

பிக்பாஸ் நிகழ்ச்சிகள் நேற்று கால் சென்டர் டாஸ்க் நடந்து முடிந்தது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 4, 2020, 12:34 PM IST
    1. பிக் பாஸ் தமிழ் முதல் புரோமோ வீடியோ வெளியீடு
    2. பாலாஜி மற்றும் அனிதா, ஆரியிடம் கேள்வி
    3. கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் தத்தளித்த ஆரி
வீடியோ: கேள்விக்கு மேல் கேள்வி கேட்கும் பாலா மற்றும் அனிதா; தத்தளிக்கும் ஆரி! title=

பிக்பாஸ் நிகழ்ச்சிகள் நேற்று கால் சென்டர் டாஸ்க் நடந்து முடிந்தது. பின்னர், இந்த டாஸ்க்கில் நன்றாக விளையாடியவர்களை வரிசைப்படுத்துதல் நிகழ்வு நடைபெற்றது. 

அப்போது எந்த ஒரு முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது. தனக்கு இரண்டாவது இடம் கிடைக்கவில்லை என்ற கோபத்தில் அனிதா (Anitha Sampathஎந்த இடத்திலும் நிற்க முடியாது என்று கூறினார். இதை அடுத்து பத்தாம் இடம் காலியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ |  பிக் பாஸ் தமிழ் 4 இல் கவின் இருந்தாரா? நடிகர் அறிக்கை வெளியீடு!

இந்த நிலையில் நேற்றைய நிகழ்வு குறித்து இன்று ஆரி, அனிதா மற்றும் பாலாஜி பேசிக்கொள்ளும் காட்சி இன்றைய பிக் பாஸ் (Bigg Boss Tamilமுதல் புரோமோவில் தென்படுகிறது. அப்போது பாலாஜி (Balaji Murugadossகூறியபோது சனம் ஷெட்டிக்கு யாரும் ஆதரவு கொடுக்கவில்லை என்றால் ஒரே ஒரு விஷயம், ஒரு கால் வந்தது என்பதற்காக இரண்டு கால் வந்தவர்கள் என்ன தப்பு செய்தார்கள் என்று ஆரியை நோக்கி கேள்வி எழுப்பினார்.

அப்போது அனிதா ’நான் வந்து தோல்வி அடைந்தவர் என்றே வைத்துக்கொள்வோம். சனம்ஷெட்டிக்கு நீங்கள் ஏன் ஆதரவு கொடுத்தீர்கள்' என்று கேட்ட கேள்விக்கு பதில் கூறிய ஆரி 'சனம் சரியாகத்தான் விளையாடினார் என்பதால் ஆதரவு கொடுத்தேன்’ என்றார். சரியான ஒரு நபருக்கு ஆதரவு கொடுக்கவில்லை எப்படி? என்று கேட்க அதற்கு ’நீங்கள் கைதூக்கியது தவறு' என்று அனிதா கூற, அதற்கு ஆரி, ’அது உங்கள் பார்வை' என்று கூறுகிறார். இறுதியில் இவர்கள் மாறி மாறி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரி முடியாமல் திணறுகிறார். 

ALSO READ | பிக் பாஸ் தமிழ் 4: கண்ணீரில் பாலா: "யாரையாவது காயப்படுத்தினால் மன்னிக்கவும், ஆனால்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News