இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் மூன்று டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
முதல் டெஸ்ட்டில் இந்திய அணி போராடி தோற்றது. இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சுரியனில் தற்போது நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 335 ரன் குவித்தது. அந்த அணியின் மார்க்ரம் 94 ரன்களும் ஹாசிம் அம்லா 82 ரன்களும் கேப்டன் டுபிளிசிஸ் 61 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர் விஜய் 46 ரன் எடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினாலும் கேப்டன் விராத் கோலி பொறுப்பாக ஆடி அணியை பெரும் சரிவிலிருந்து மீட்டார்.
நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன் எடுத்திருந்தது. கோலி 130 பந்துகளில் 85 ரன்களுடனும் ஹர்திக் பாண்டியா 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. போட்டியின் முக்கியமான தருனத்தில் ஹார்டிக் பாண்டியா மோசமான நிலையில் ரன் அவுட் ஆனார். இவரின் அவுட்டிற்கு கிரிக்கெட் பிரபலங்கள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வீடியோ:....
Today Hardik Pandya proved he is more dumber than Alia Bhatt. #SAvIND pic.twitter.com/xcpjuHDKDA
— Waѕiyullah Budye (@WasiyullahB) January 15, 2018
எனினும் சிறப்பாக விளையாடிய கேப்டன் விராத் கோலி சதமடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவருக்கு 21-வது டெஸ்ட் சதம் என்பது குறிப்பிடத்தக்கது!