Viral Video: டி வில்லியர்ஸ் அவுட்டானதும் விரக்தியான மகன்; க்யூட் வீடியோ

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.  

Written by - ZEE Bureau | Last Updated : Sep 28, 2021, 07:54 AM IST
Viral Video: டி வில்லியர்ஸ் அவுட்டானதும் விரக்தியான மகன்; க்யூட் வீடியோ

ஐபிஎல் 2021 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் அணிகள் துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்றது. 

முதலில் ஆடிய பெங்களூரு (RCB) அணிக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அந்த அணியின் தொடக்க வீரரான தேவ்தத் படிக்கல், 2வது ஓவரிலேயே பும்ரா பந்து வீச்சில் டக் அவுட் ஆனார். இருப்பினும், அதன் பின்னர் பாட்னர்ஷிப் அமைத்த விராட் கோலியும் கீப்பர் ஸ்ரீகர் பரத்தும் அற்புதமாக விளையாடினர்.

ALSO READ: கேப்டன் பதவியிலிருந்து விலகிய கோலி; RCB ரசிகர்கள் அதிர்ச்சி

இருவருக்கும் இடையே சூப்பரான பாட்னர்ஷிப் உருவாகி வந்ந போது தான், ஸ்ரீகர் பரத் 32 ரன்களில் ராகுல் சாகர் ஓவரில் வெளியேறினார். அதன் பின்னர் களமிறங்கிய மெக்ஸ்வெல் நன்கு தனது ஆட்டத்தை விளையாடி பெங்களூரு அணியின் ஸ்கோரை சீராக உயர்ந்தினார். மறுமுனையில் அரைசதம் அடித்திருந்த கோலி (Virat Kohli) 52 ரன்களில் மில்னே பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து ஏபி டி வில்லியர்ஸ் களத்தில் இறங்கினார்.

மெக்ஸ்வெலுடன் ஏபி டி வில்லியர்ஸும் இணைந்ததால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர தொடங்கியது. 18 வது ஓவரில் பும்ரா வீசிய 3 வது பந்தில் செட் ஆகி இருந்த பேட்ஸ்மென் மெக்ஸ்வெல் 56 ரன்களில் வெளியேறினார். அதற்கு அடுத்த பந்திலேயே ஏபி டி வில்லியர்ஸ் ஆட்டமிழந்தார். சிக்சர் அடிக்க ஏபி டி முயல போது அவர் அவுட் ஆனார். அடுத்து அடுத்து 2 அதிரடி வீரர்கள் வெளியேறியதால் ஆர்சிபி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

டி வில்லியர்ஸ் அவுட்டானதும் கேமரா அவரது குடும்பத்தினர் பக்கம் திரும்பியது. தனது தந்தை அவுட்டான விரக்தியான் நிலையில் அங்கு இருந்த நாற்காலியில் ஓங்கி ஒரு அடி விட்டார் அவரது மகன். ஆனால் அது வலிக்கவே அடுத்த நொடி ஏன் இதை செஞ்சோம் என அவரது முகம் மாறுகிறது. அவரது இந்த செயலைக் கண்டு டி வில்லியர்ஸின் மனைவி டேனியல் சற்று பதறிவிட்டார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

 

ALSO READ ICC T20 World Cup: உலக கோப்பை பைனல் போட்டியை நேரில் பார்க்க முடியுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News