VIDEO: சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 250 டிவிகளை திருடிச் சென்ற கொள்ளையர்கள்

சுமார் 250 தொலைக்காட்சிகள், ரூ. 35 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் வெள்ளி நாணயங்களை எடுத்துச் சென்ற குற்றவாளிகள். காவல்துறையினர் விசாரணை.....!!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 22, 2019, 04:47 PM IST
VIDEO: சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 250 டிவிகளை திருடிச் சென்ற கொள்ளையர்கள் title=

பாட்னா: பீகாரில் காவல்துறை நிர்வாகம் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்த எவ்வளவு முயற்ச்சிகள் மற்றும் திட்டங்களை மேற்கொண்டாலும், குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாட்னாவின் மெஹ்திகஞ்ச் காவல் நிலைய பகுதியில் உள்ள ஒரு டிவி குடோனில் இருந்து ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள டிவி திருடப்பட்டுள்ளது.

இந்த திருட்டு சம்பவத்தில் மூன்று திருடர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் எல்.ஈ.டி (LED TV) டி.வி.களை கிடங்கிலிருந்து ஒவ்வொன்றாக எப்படி வெளியேறுகிறார்கள் என்பதை சி.சி.டி.வி (CCTV) காட்சிகள் காட்டுகிறது. தற்போது நாடு முழுவதும் பண்டிகை காலம் என்பதால், மின்னணு பொருட்களின் விற்பனை அதிகமாக இருக்கும். எனவே விற்பனை நிறுவனங்களின் கிடங்கில் டிவியின் பங்கு அதிகமாக இருந்தது.

முதலில் திருடர்கள் அங்கிருந்த பாதுகாவலர் மற்றும் ஓட்டுநரை பிணைக் கைதிகளாக பிடித்து கட்டி வைத்து விட்டு, குடோனுக்குள் நுழைந்த அவர்கள் சுமார் 50 லட்சம் மதிப்புள்ள டிவி பெட்டிகளைக் கொள்ளையடித்து சென்றனர். சுமார் 250 தொலைக்காட்சிகள், அங்கிருந்த 35 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் வெள்ளி நாணயங்களை குற்றவாளிகள் எடுத்துச் சென்றனர்.

 

இந்த சம்பவம் அக்டோபர் 20 அன்று நடந்த மெஹ்திகஞ்சில் உள்ள ஒரு கடையில் நடந்துள்ளது. தற்போது, காவல்துறையினர் இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Trending News