Viral: கோகோ கோலாவை சைகையால் சரித்த Ronaldoவை மீம்ஸால் கலாய்க்கும் அமுல்; Fevicol

கோகோ கோலாவை தனது செய்கையால் உலுக்கிய ரொனால்டோவை பாராட்டும் போக்கில் கோகோ கோலாவை கலாய்க்கிறது அமுல் நிறுவனம். ஓரிரு தினங்களுக்கு முன்னதாக நடைபெற்ற ஒரு சிறிய நிகழ்வு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 18, 2021, 06:10 PM IST
  • கோகோ கோலாவை சைகையால் சரித்த ரொனால்டோ
  • கால்பந்து ஜாம்பவானை மீம்ஸால் கலாய்க்கும் ஃபெவிக்கால்
  • விளம்பரத்தால் நையாண்டி செய்யும் அமுல்
Viral: கோகோ கோலாவை சைகையால் சரித்த Ronaldoவை மீம்ஸால் கலாய்க்கும் அமுல்; Fevicol

கோகோ கோலாவை தனது செய்கையால் உலுக்கிய ரொனால்டோவை பாராட்டும் போக்கில் கோகோ கோலாவை கலாய்க்கிறது அமுல் நிறுவனம். ஓரிரு தினங்களுக்கு முன்னதாக நடைபெற்ற ஒரு சிறிய நிகழ்வு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

OG விட் எஜமானர்களான ஃபெவிகோல் மற்றும் அமுல் ஆகியோர் ரொனால்டோ, கோகோ கோலாவை விலக்கிய செய்தியை விளம்பரங்களாக மாற்றி சூப்பர் கோல் அடித்துள்ளன.

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோக்கை விலக்குவது போல் செய்த ஒற்றை செய்கை “பாட்டில் கேட் ஊழலை”( Bottlegate scandal) என்று சமூக ஊடகங்களில் பிரபலமாகிவிட்டது.

Also Read | Coca-Cola: பத்திரிகையாளர் சந்திப்பில் ரொனால்டோவின் கையசைவால் கவிழ்ந்த நிறுவனம்

இந்த சம்பவத்திற்குக் பின்னர்,  கோகோ கோலா பங்கு விலையில் 4 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இழந்தது. இது சமூக ஊடகங்களில் கோகோ கோலாவை நையாண்டி செய்யும் மீம்ககளின் எண்ணிக்கையை அதிகரித்தது.

அமுல் மற்றும் ஃபெவிகால் நிறுவனங்கள், விளம்பரத் துறையில் நேரம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அணுகுமுறையை கொண்டவை என பெயர் பெற்றுள்ளன. எந்தவொரு பொன்னான வாய்ப்பையும் விட்டு விடாமல், அவர்கள் அற்புதமான படைப்பாற்றலைக் காட்டி தங்கள் பிராண்டை நிலைநிறுத்திக் கொள்வதில் வல்லவர்கள். 

சூப்பர் மார்க்கெட்டிங்

ஃபெவிகோல் அதன் பொதுவான விளம்பரங்களில் ஒன்றைக் கொண்டு தனது ஒட்டிக்கொள்ளும் திறனைப் பற்றி சிலாகித்துக் கூறியது. பிசின் பாட்டில்கள் பத்திரிகையாளர் சந்திப்பு மேசையில் உறுதியாக நின்றன. விளம்பரம், “பாட்டிலும் நகராது, மதிப்பும் குறையாது” என்று சொல்கிறது. இந்த மீம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படுகிறது.  

செய்தித்தாள்களில் சூப்பரான கார்ட்டூன்களை வெளியிடுவதற்கு பெயர் பெற்ற பால் நிறுவனம் அமுல் மட்டும் கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டுவிடுமா என்ன? தனது பங்குக்கு கார்ட்டூனை ஒன்றை வெளியிட்டது. அமுல் பெண் அதன் சுவையான பாட்டில் பாலை வைத்திருக்கிறார். பின்னணியில் அமுல் கூல் மற்றும் நிறுவனத்தின் வெண்ணெயும் இருந்தன. "ஒருவரின் உணர்வைப் புண்படுத்துவதில்லை, ஒருபோதும் ஒதுக்கித் தள்ளவில்லை" என்ற பொருள் கொண்ட வாசகங்கள் அதில் இடம் பெற்றுள்ளது.

முன்னதாக, ரசிகர்கள் கோகோ கோலா விளம்பரத்தில் ரொனால்டோ நடித்த பழைய வீடியோவை பரவலாக பார்த்தனர். அதனால் கோகோ கோலாவின் பத்து வருட பழைய விளம்பரம் ஒன்றும் சமூக ஊடகங்களில் வைரலாகியது. அண்மையில் கோகோ கோலாவைப் புறம்தள்ளிய கால்பந்து வீரரின் பத்து ஆண்டுகளுக்கு முந்தைய நிலைப்பாடு தற்போது பல்டி அடித்துவிட்டதாக  கூறி பழைய மற்றும் புதிய வீடியோவை பலர் பகிர்ந்து கொண்டனர்.

Also Read | Jagame Thandhiram: ஜகமே தந்திரம் வீடியோ; சுவாரசியமான தகவல் வெளியீடு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News