ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு! ஆட்டுக்குட்டியிடம் வெயிட்டு காட்டும் பூனைக்குட்டி!

பூனைக்குட்டி ஒன்று ஆட்டுக்குட்டியை பாய்ந்து தாக்கி வீணாக வம்பிழுக்கும் வீடியோ ஒன்று நெட்டிசன்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : May 15, 2022, 12:11 PM IST
  • ஆட்டு குட்டியுடன் சண்டை போடும் பூனை.
  • அடிக்கும் விதமாக நெருங்கி சென்று சேட்டை.
  • இணையத்தில் வைரலாகும் வீடியோ.
ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு! ஆட்டுக்குட்டியிடம் வெயிட்டு காட்டும் பூனைக்குட்டி! title=

பல வீடுகளில் ஒவ்வொரு விதமான வளர்ப்பு பிராணிகளை ஆசை ஆசையாக வளர்ப்பார்கள், சிலர் ஒரு பிராணியையோ அல்லது சிலர் பல பிராணிகளையோ வளர்ப்பார்கள்.  அவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட பிராணிகளை வளர்ப்பவர்கள் வீட்டில் அந்த விலங்குகளிடையே சில சுவாரஸ்யமான சம்பவங்கள் நடக்கும்.  சில விலங்குகள் ஒன்றுக்கொன்று அன்பை பகிர்ந்து கொஞ்சி குலாவும், சில விலங்குகள் பரம எதிரிகள் போல எப்போதும் முட்டிக்கொள்ளும்.  எப்படி இருந்தாலும் அவைகள் செய்யும் செயல்கள் நம்மை கவரும் விதமாக இருக்கும், பிராணிகளுக்கிடையே நடக்கும் அழகான நிகழ்வுகளை சிலர் படம்பிடித்து இணையத்தில் பலரின் பார்வைகளை பெற பகிர்ந்து கொள்வார்கள்.

goat

மேலும் படிக்க | இது சீறும் சிறுத்தையின் தாக்குதலா இல்லை நண்பனின் சீரியஸ் விளையாட்டா 

அப்படி ஒரு சுவாரஸ்யமான வீடியோ தான் ட்விட்டரில் பகிரப்பட்டு இருக்கிறது.  ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் தான் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டு இருக்கிறது.  அந்த வைரல் வீடியோவில், வீட்டிற்குள் பூனைக்குட்டி ஒன்றும், ஆட்டுக்குட்டி ஒன்றும் நேரெதிரே நின்று கொண்டு இருப்பதை காணலாம்.  அந்த பூனை அமைதியாக நிற்கும் ஆட்டுக்குட்டியை பாய்ந்து அடிக்க செல்கிறது, ஆனால் அடிக்காமல் வெறும் பயம் மட்டும் காட்டிவிட்டு ஓடிவந்து சுவற்றின் பின்னால் ஒளிந்து கொண்டு ஆட்டின் ரியாக்ஷனை பார்க்கிறது.  அந்த ஆடு அமைதியாக நிற்கிறது, ஆடு எதுவும் செய்யாததால் பூனைக்கு தைரியம் வந்து மீண்டும் ஓடி வந்து ஆட்டுக்குட்டியை தாக்குகிறது.  அதனைத்தொடர்ந்து மீண்டும் ஆட்டுக்குட்டியை தாக்க செல்கிறது, உடனே அந்த ஆட்டுக்குட்டி பயந்து ஓட முயல்வதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.

 

இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை ஐம்பத்தி ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.  இந்த இரண்டு வளர்ப்பு பிராணிகளின் செயல்களை பார்த்த பலரும் நகைச்சுவையான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.  நெட்டிசன்கள் பலரும் வீடியோவிற்கு லைக் செய்தும், பகிர்ந்தும் வருகின்றனர்.

மேலும் படிக்க | நாயை தூக்கிச்செல்லும் சிறுத்தை: திகிலூட்டும் சிசிடிவி காட்சிகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News