Viral Video: சிபேன்ஸி கொடுத்த ஹாட் ‘கிஸ்’; சொக்கி போன பெண்

பல வகையான வீடியோக்கள் சமூக வாலைதளத்தில் பகிரப்பட்டாலும், விலங்குகள் தொடர்பான வேடிக்கை வீடியோக்கள் என்றுமே எளிதில் வைரலாகி விடும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 3, 2022, 04:24 PM IST
Viral Video: சிபேன்ஸி கொடுத்த ஹாட் ‘கிஸ்’; சொக்கி போன பெண் title=

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.  பல வகையான வீடியோக்கள் சமூக வாலைதளத்தில் பகிரப்பட்டாலும், விலங்குகள் தொடர்பான வேடிக்கை வீடியோக்கள் என்றுமே எளிதில் வைரலாகி விடும். 

அந்த வகையில், ஜீன்ஸ் அணிந்த சிம்பன்சி பெண் ஒருவருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சிம்பன்சிகள் என்னும் மனித குரங்குகள் என்றுமே மனிதர்களை போலவே நடந்து கொள்பவை.  இந்த சமீபத்திய வைரல் வீடியோ அதற்கு சான்றாகும்.  இந்த புதிய வீடியோ உங்கள் மனநிலையை மாற்றி முகத்தில் நிச்சயம் புன்னகையை மலர வைக்கும். சிம்பன்சி மனிதனுடன் போஸ் கொடுப்பதை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? இல்லையெனில், இந்த புதிய வைரல் வீடியோவை நீங்கள் விரும்புவீர்கள். 

மேலும் படிக்க | Viral Video: 1956 பிரிட்ஜில் இத்தனை அம்சங்களா... வியக்க வைக்கும் விளம்பரம்

சௌமியா சந்திரசேகரன் என்ற இன்ஸ்டாகிராம் பயனர் சமீபத்தில் தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சஃபாரி வேர்ல்டுக்குச் சென்று சிம்பன்சியுடன் போட்டோஷூட் நடத்தினார். இன்ஸ்டாகிராமில் இதுவரை 5.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் மற்றும் 20 கருத்துகளுடன் 255,288 விருப்பங்களைப் பெற்றுள்ளது.

வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்: 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by  (@sowmiya_chandrasekaran)

 

வைரலான வீடியோவில், சௌமியா ஊஞ்சலில் அமர்ந்திருப்பதையும், சிம்பன்சி ஜீன்ஸ் அணிந்திருப்பதையும் காணலாம். மனித குரங்கு சௌமியாவுடன் தோளில் கைகளை வைத்துக்கொண்டு அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுப்பதைக் காணலாம். அதுமட்டுமின்றி, சிம்பன்சி, ஒரு உண்மையான காதலனைப் போல சௌமியாவின் கையில் முத்தம் கொடுத்தது.

மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News