படிக்கட்டில் தவறி விழுந்த பயணி! சூப்பர் ஹீரோபோல காப்பாற்றிய கண்டக்டர்!

Viral Video: கேரளாவில் பேருந்தில் படியில் நின்று பயணம் செய்த பயணி ஒருவர் திடீரென நிலைதடுமாறி தவறி விழும் போது நடத்துனர் அசால்டாக அவரை காப்பாற்றிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.   

Written by - RK Spark | Last Updated : Jun 7, 2024, 12:52 PM IST
  • திடீரென தவறி விழுந்த பயணி.
  • நொடி பொழுதில் காப்பாற்றிய கண்டக்டர்.
  • கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.
படிக்கட்டில் தவறி விழுந்த பயணி! சூப்பர் ஹீரோபோல காப்பாற்றிய கண்டக்டர்! title=

Kerala Viral Video: பொதுவாக இந்தியாவில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கும். எனவே சாலைகளில் பைக்கில், காரில் அல்லது பேருந்தில் பயணம் செய்யும் போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அதே போல ​​பேருந்தில் நின்று கொண்டு பயணம் செய்யும் போது ஓட்டுநர் திடீர் என்று பிரேக் போடும் பட்சத்தில் நிலைதடுமாறி விழுவது சாதாரண ஒன்று தான். கேரளாவில் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில், டிக்கெட் வாங்குவதற்காக பின்பக்க படியின் நுனியில் நின்று கொண்டிருந்த பயணி ஒருவர் கம்பியில் இருந்து கைகளை எடுக்கிறார். அப்போது பயணி நிலைதடுமாறி கீழே விழ செல்கிறார். இதனை பார்த்த நடத்துனர் அசால்டாக அவரது கையை பிடித்து உயிரை காப்பாற்றி உள்ளார். 

மேலும் படிக்க - கொதிக்கும் வெயிலில் இப்படி ஜாலியா இருந்தா நல்லாருக்குமே? ஏங்கும் நெட்டிசன்கள்

வீடியோவின் ஆரம்பத்தில் வழக்கமான பேருந்து பயணத்தின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒருவேளை பேருந்து விபத்துக்குள்ளான வீடியோவா என்று பார்த்து கொண்டு இருக்கும் போது, பயணிகள் பேருந்து நடத்துனரிடம் பணம் கொடுத்து பயண சீட்டை வாங்குகின்றனர். இந்நிலையில், பின் பக்க வாசலில் நின்று கொண்டிருந்த பயணி டிக்கெட்டுக்காக நடத்துனரை நோக்கி செல்கிறார். அந்த சமயத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. வேகமாக சென்று கொண்டிருந்த அந்த பேருந்தில் நடத்துனர் அந்த பயணியின் கையை பிடிக்கவில்லை என்றால் எப்படிப்பட்ட அசம்பாவிதமும் நடைபெற்று இருக்கும். துரிதமாக நடத்துனர் செயல்பட்டு பயணியின் உயிரை காப்பாற்றி உள்ளார். 

ஒரு சூப்பர் ஹீரோ போல கீழே விழ இருந்த பயணியை காப்பாற்றி உள்ளார் நடத்துனர். பின்னர் பேருந்து நிறுத்தப்பட்டு வேறு ஏதும் அடிபட்டு உள்ளதா என்பதை உறுதி செய்த பின்பு மீண்டும் பேருந்தை இயக்கி உள்ளனர். சரியான நேரத்தில் நடத்துனர் செய்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளங்கில் பாராட்டு குவிந்து வருகிறது. வைரலான இந்த வீடியோவில், "அவரது தேவதை அங்கேயே அவரது கையைப் பிடித்து காப்பாற்றி உள்ளது" என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர் "ஸ்பைடர்மேன் ரிஃப்ளெக்ஸ்" என்று பதிவிட்டுள்ளார். 

மேலும் படிக்க - முத்தம் கொடுத்தது ஒரு குத்தமா... மணமகனை அடித்து துவைத்த மணப்பெண் வீட்டார்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News