Watch: விவசாயிகளின் பிரச்சனையை பேசும் ‘லாபம்’ திரைப்பட trailer..!

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘லாபம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது..!

Last Updated : Aug 23, 2020, 11:06 AM IST
Watch: விவசாயிகளின் பிரச்சனையை பேசும் ‘லாபம்’ திரைப்பட trailer..! title=

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘லாபம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது..!

கடந்த 2015 ஆம் ஆண்டு புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தை இயக்கிய SP.ஜனநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். கலையரசன், ஜகபதிபாபு, சாய் தன்ஷிகா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் 7C.S எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக தடைபட்டிருந்த ‘லாபம்’ படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் தொடங்கின. விஜய் சேதுபதி, கலையரசன் உள்ளிட்ட படக்குழுவினர் தங்களது டப்பிங் பணிகளை செய்து முடித்தனர். இந்நிலையில், விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு ’லாபம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. விவசாயத்தையும், விவசாயிகளின் பிரச்சனையையும் மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

ALSO READ | நடிகர் விஜய் சேதுபதியின் உப்பேனா திரைப்பட போஸ்டர் வெளியானது...

தொழிற்சாலை இயங்கினால் தான் விவசாயம் செய்ய முடியும் என்று இங்கே நம்ப வைக்கப்படுவதாகவும், ஆனால் உண்மையில் விவசாயம் செய்தால் மட்டும் தான் இங்கே தொழிற்சாலை இயங்க முடியும் என்றும் விஜய் சேதுபதி ஆழமான வசனத்தை விஜய் சேதுபதி பேசியுள்ளார். கார்ப்பரேட் அரசியல், பொருளாதார சுரண்டல் உள்ளிட்டவற்றை மையப்படுத்தியே இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டிருப்பதை ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் உணர்த்துகின்றன. 

Trending News