பாஜக தலைவர்களை பங்கம் செய்த Watchman படக்குழுவினர்!

பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்களை கிண்டல் செய்யும் வகையில் வாட்ச்மேன் படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டுள்ளனர்!

Updated: Mar 18, 2019, 08:27 PM IST
பாஜக தலைவர்களை பங்கம் செய்த Watchman படக்குழுவினர்!

பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்களை கிண்டல் செய்யும் வகையில் வாட்ச்மேன் படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டுள்ளனர்!

இயக்குநர் விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வாட்ச்மேன். முன்னதாக படத்தில் இடம்பெற்றுள்ள பாடலை வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ள படக்குழு சமீபத்தில் தங்கள் திரைப்பட போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர்களை படக்குழுவினர் கிண்டல் செய்துள்ளனர்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் சௌதிக்கர் (காவலாளி) நரேந்திர மோடி என பெயரை மாற்றினார். அவரை தொடர்ந்து பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, பியூஷ் கோயல், ஜே.பி. நட்டா, ஹர்ச வர்த்தன், தர்மேந்திர பிரதான் ஆகியோர் தங்களது ட்விட்டர் கணக்கின் பெயரில் சௌதிக்கர் என்ற முன்னொட்டை இணைத்துக் கொண்டனர். இதற்கு முன்னதாக நேற்று அவர் வெளியிட்ட பதிவில் இருந்த நானும் காவலாளிதான் என்ற வீடியோ டுவிட்டரில் நம்பர் ஒன் டிரண்டிங்காக இருந்தது.

இதற்கு நாடு முழுக்க வரவேற்பும் எதிர்ப்பும் சரிபாதியாக கிளம்பின. இந்நிலையில் பா.ஜனதா தலைவர்களின் இந்த செயலை கிண்டல் செய்யும் விதமாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் திரைப்பட போஸ்டரில் நாய் ஒன்று ‘நானும் காவலாளிதான்’ என்று சொல்வது போல் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டருக்கு பா.ஜனதா தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

வாட்ச்மேன் என்ற அந்த படத்தில் ஜி.வி.பிரகாசுடன், அந்த நாயும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறது. படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.